முகப்பு
நூல் அரங்கம்

சிதம்பரம் மறைஞான சம்பந்தர் அருளிய அருணகிரிப் புராணம்

Updated On : 9 செப்டம்பர், 2025 at 5:15 AM
பகிர்:

சிதம்பரம் மறைஞான சம்பந்தர் அருளிய அருணகிரிப் புராணம்-மூலமும் உரையும்; முனைவர் கா.நாகராசு; பக். 344; ரூ.300; அருணா பப்ளிகேஷன்ஸ், சென்னை-49. ✆ 044-26507131.

நினைத்தாலே முக்தி அளிக்கும் திருவண்ணாமலை திருத்தலத்துக்கு சைவ எல்லப்ப நாவலர் பாடிய அருணாசல புராணம், சிதம்பரம் மறைஞான சம்பந்தர் பாடிய அருணகிரிப் புராணம் என இரு தலபுராணங்கள் இருக்கின்றன. இவற்றில் அருணாசல புராணத்துக்கு பல உரை நூல்கள் உள்ளன. ஆனால், அருணகிரிப் புராணத்துக்கு உரைநூல் இல்லை என்கிற குறையைப் போக்கி அதன் முதல் உரை நூல் என்கிற சிறப்பைப் பெறுகிறது இந்நூல்.

தாமே கடவுள் என்கிற பிரம்மன், திருமால் ஆகியோரது அறியாமையைப் போக்க இறைவன் அடிமுடி காண முடியாத பெருநெருப்பு வடிவமாய் திருவண்ணாமலை திருத்தலத்தில் நின்றார்.

பின்னர், பிரம்மன், திருமாலின் வேண்டுகோளை ஏற்று பெருநெருப்பு வடிவத்தை பெருமலையாக மாற்றி சிவபெருமான் அருள்பாலித்ததே திருவண்ணாமலை. அந்த வகையில் திருவண்ணாமலை தோன்றிய வரலாறு, இறைவனை உமையம்மை வழிபட்டது, திருவண்ணாமலையை வலம் வருவதால் பக்தர்களுக்கு கிடைக்கும் பலன்கள் முதலானவற்றைச் சொல்கிறது அருணகிரிப் புராணம். அதன் ஐந்து சருக்கங்களில் அமைந்த 613 பாடல்களுக்கும் அழகு தமிழில், எளிய நடையில் உரை விளக்கம் தந்துள்ளார் நூலாசிரியர்.

நூலின் தொடக்கமாக சிதம்பரம் மறைஞான சம்பந்தரின் வாழ்க்கை வரலாறு இடம்பெற்றுள்ளது. மேலும், அருணகிரிப் புராணத்தின் உரைநடைச் சுருக்கமும் தரப்பட்டிருக்கிறது. பாடல்

களையும், உரைவிளக்கத்தையும் நன்றாக உள்வாங்கிக் கொள்ள இந்த உரைநடைச் சுருக்கம் துணை செய்கிறது. ஆன்மிக அன்பர்கள், சிவ பக்தர்கள் அவசியம் வாசித்து பயன் பெற வேண்டிய நூல்.

முழு கட்டுரையைப் படிக்க →