முகப்பு
நூல் அரங்கம்

எத்தனை மனிதர்கள்

Updated On : 9 செப்டம்பர், 2025 at 5:15 AM
பகிர்:

எத்தனை மனிதர்கள் - டாக்டர் எஸ். அகிலாண்ட பாரதி; பக்.260; ரூ.360; ஹெர் ஸ்டோரிஸ், சென்னை-04; ✆ 98409 69757.

ஒரு சராசரி மனிதர் தனது வாழ்நாளில் சக மனிதர்களின் பிரச்னைகளை அறிந்து கொள்வதைவிட மருத்துவருக்கு வாய்ப்புகள் அதிகம். அப்படி கண் மருத்துவரானநூலாசிரியர், தன் வாழ்நாளில் சந்தித்த மனிதர்களின் வாழ்க்கையைத் தொடராக எழுதியுள்ளார்.

ஒவ்வொரு கட்டுரையும் வெறும் அனுபவங்களின் தொகுப்பாக இல்லாமல் ஒரு படிப்பினையை சொல்வதாக அமைந்துள்ளது. சில கட்டுரைகளில் மனிதர்கள் வாயிலாக மருத்துவத்தையும், சிலவற்றில் நம்பிக்கை, நேர்மறை எண்ணங்களையும் நூலாசிரியர் விதைத்துள்ளார். ஒவ்வொரு கதையிலும் மனிதர்களுக்கு ஏற்படும் நோய்களையும், மருத்துவம் குறித்த சந்தேகங்களுக்கான தீர்வையும் வழங்கியிருப்பது சிறப்பு.

குறிப்பாக, 'மின்னும் நட்சத்திரங்கள்' மூலம் டெüன்ஸ் குழந்தைகளின் எதிர்பார்ப்பில்லாத அன்பையும், 'ஆற்றுப்படை' மூலம் நோயால் பாதிக்கப்பட்டோருக்கு துணை தேவை என்பதையும் பதிவு செய்துள்ளார். பெரும்பாலான கட்டுரைகள் குடும்பத்திலும், சமூகத்திலும் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்து பேசுகின்றன.

மருத்துவத் துறையில் தான் நோயாளிகளிடமிருந்து கற்ற ஒரு மருத்துவரின் அனுபவ களமாக 'எத்தனை மனிதர்கள்' விளங்குகிறது.

தினமும் பழகும் மனிதர்கள் குறித்தே சரியான புரிதல் இல்லாமல் பலர் பயணிக்கின்றனர். மருத்துவர்-நோயாளி இடையேயான இந்தப் பயணம் மருத்துவம் குறித்து மட்டுமல்லாமல் வாழ்வின் பல்வேறு மனிதர்களின் மனநிலையை வெளிப்படுத்துகிறது. நல்லதொரு நூல் இது.

முழு கட்டுரையைப் படிக்க →