முகப்பு
நூல் அரங்கம்

சாமானியர்களின் போர்

Updated On : 9 செப்டம்பர், 2025 at 5:15 AM
பகிர்:

சாமானியர்களின் போர் - ரிஷிகேஷ் ராகவேந்திரன்: பக்.152; ரூ.190; கிழக்கு பதிப்பகம், சென்னை-14; ✆ 044-4200 9603.

நவீன தொழில்நுட்பத்தில் தனிமனிதரின் ஒவ்வொரு நடவடிக்கையும் வணிக நிறுவனங்களும், அரசும் கண்காணிக்கின்றன. ஓர் அரசு எந்த தொழில்நுட்பத்தைக் கொண்டு தனது குடிமக்களை கண்காணிக்கிறதோ அதே தொழில்நுட்பத்தை ஒரு சாமானியனும் பயன்படுத்த முடியும் அல்லவா? அவ்வாறு அரசின் கோட்டையை தகர்த்த சாமானியர்களின் சாம்ராஜ்யங்களை விவரிக்கிறது இந்த நூல்.

அமெரிக்காவின் போர் குற்றங்களை உலகறிய செய்த 'தி கொலாட்ரல் டேமேஜ்' எனும் காணொலியை கசிய விட்ட பிராட்லி மேனிங், இருபதாம் நூற்றாண்டின் மிகப் பெரிய ஆவணக் கசிவாக கருதப்படும் அமெரிக்கா-வியட்நாம் போரின் ரகசியங்களை வெளியிட்ட டேனியல் எல்ஸ்பெர்க் ஆகிய இருவரும் ஒரு பேரரசை அசைத்துப் பார்த்தவர்கள். அதேவேளையில் ஜூலியன் அசாஞ்சே, விக்கிலீக்ஸ் எனும் புதிய தொழில்நுட்பம் மூலம் ஒரு ரகசிய உலகையே உருவாக்கினார்.

குறிப்பாக 'டார்க் வெப்' உலகின் செயல்பாடுகள், செயல்படும் விதம், சாதக பாதகங்கள் குறித்து இந்நூல் பேசுகிறது. தனிமனிதர் செய்யும் தவறுகளை அரசு கண்காணிப்பது போல், அரசின் தவறுகளையும் தொழில்நுட்பம் மூலம் தனிமனிதர் வெளிக்கொண்டு வர முடியும் என்பதை இதன் மூலம் அறியமுடிகிறது. தொழில்நுட்பம் சார்ந்த வார்த்தைகளும் அதற்கான விளக்கங்களும் தரப்பட்டுள்ளது சிறப்பு. அரசின் தகவல்களை இணையம் மூலம் ஊடுருவிய சாமானியர்களின் வரலாற்றை ஒரு திரில்லர் படம் போல் விறுவிறுப்பாக எழுதியிருக்கிறார் நூலாசிரியர். நிழல் உலக தொழில்நுட்பம் குறித்து அறிய விரும்புவோருக்கு சிறந்த நூல் இது.

முழு கட்டுரையைப் படிக்க →