முகப்பு
நூல் அரங்கம்

அமுதசுரபி தீபாவளி மலர்

ஒவ்வொரு பக்கமும் தீபாவளியைச் சிறப்பிக்கும் விதமாக அமைந்துள்ளது.

Updated On : 9 செப்டம்பர், 2025 at 5:15 AM
பகிர்:

அமுதசுரபி தீபாவளி மலர் - 2024; பக்.235; ரூ.200; திருப்பூர் கிருஷ்ணன், சென்னை - 102; ✆044 - 2615 7879.

சிறுகதை, நாடகம், கவிதை, கட்டுரை, வாழ்வியல், கலை, ஆன்மிகம், மருத்துவம், அறிவியல், விளையாட்டு, தமிழ் வளர்க்கும் அமைப்புகள், பொது ஆகிய தலைப்புகளில் ஒவ்வொரு படைப்பும் பழமையும், புதுமையும் கலந்து இந்தாண்டு அமுதசுரபி தீபாவளி மலரில் வெளியாகியுள்ளது.

திருமாலின் அவதாரமான கண்ணன், பண்டைத் தமிழர்களை எவ்வாறெல்லாம் ஈர்த்துள்ளான் என்பதை அட்டைப்படக் கட்டுரையாக சுதா சேஷையன் விவரித்துள்ளார். கட்டுரைக்கு மெருகூட்டும் விதமாக சங்க இலக்கியங்களை மேற்கோள் காட்டியுள்ளார். ஓவியர் மணியம் செல்வனின் கைவண்ணத்தில் உருவான அட்டைப்படம் மலருக்கு எழிலூட்டுகிறது.

'காலந்தோறும் கண்ணன்' என்ற கட்டுரையில், ராம - கிருஷ்ண அவதாரங்களுக்கு இடையேயான வித்தியாசத்தை கிருஷ் கோடிட்டு காட்டியுள்ளார். கீதைக்கு உரை எழுதிய சுதந்திர போராட்ட வீரர் பாலகங்காதர திலகரை சிறையில் அடைத்தது தவறு என விக்டோரியா மகாராணிக்கு மாக்ஸ்முல்லர் கடிதம் எழுதினார். இதை ஏற்று திலகர் விடுதலை செய்யப்பட்டார் என்கிற தகவல் ஆச்சரியமூட்டுகிறது.

'இனிமேல் ராஜாராமன்தான்' சிறுகதையில், வனவாசம் முடித்து பட்டாபிஷேகம் நடந்து சிம்மாசனத்தில் அமரும்போது ராமனும் சீதையும் ஒருவரையொருவர் கண்களால் நோக்கியதன் அர்த்தம், மனித வாழ்வின் லட்சியத் தம்பதிகளின் பெருமையைக் குறிக்கிறது என்று திருப்பூர் கிருஷ்ணன் பதிவு செய்துள்ளார்.

காலஞ்சென்ற எழுத்தாளர்கள் ஜோதிர்லதா கிரிஜாவின் "திருந்த ஒரு வாய்ப்பு' கதையும் பாலகுமாரனைப் பெருமைப்படுத்தும் விதமாக நண்பர் ஜெயராமன் ரகுநாதன் பதிவு செய்திருப்பது சிலிர்ப்பூட்டுகிறது.

ஏவிஎம் தொடங்கப்பட்ட வரலாறு; நடிகர் டெல்லி கணேஷின் தீபாவளி நினைவுகள்; மாலன், சத்யா அசோகன் கவிதைகள் என ஒவ்வொரு பக்கமும் தீபாவளியைச் சிறப்பிக்கும் விதமாக அமைந்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →