முகப்பு
நூல் அரங்கம்

லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலர் -2024

லலிதா திரிபுரசுந்தரி, குக்கே சுப்ரமண்யா, அயோத்தி ராமர் ஆகிய படங்கள் வீட்டு பூஜையறையிலும் வைக்க உகந்தவை.

Updated On : 9 செப்டம்பர், 2025 at 5:15 AM
பகிர்:

லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலர் -2024; கிரிஜா ராகவன்; பக்.224; ரூ. 200; சென்னை - 83; ✆98408 16281.

காஞ்சி மகா பெரியவர், ஜெயேந்திரர், விஜயேந்திரர் வண்ணப் படங்களுடன் - மகா பெரியவரின் 'மனதின் குரல்' கட்டுரையுடன் மலர் ஆரம்பமாகிறது.

மலர்களுக்கே உண்டான சிறுகதை, கவிதை, கட்டுரை, ஆன்மிகம், சினிமா, நகைச்சுவைப் பகுதிகளுடன் முகப்பில் தமிழ்க் கடவுள் முருகன் வள்ளி தேவசேனா ஓவியம் தாங்கிய மலர் இது. இது தவிர கவிதைகளில் முருகன், மூலிகைகளின் காவலனாக முருகன், சங்கப் பாடல்களில் முருகன், திருமுருகாற்றுப் படையில் முருகன், தவிர பைம்பொழில், திருச்செங்கோடு தல முருகன்களைப் பற்றியும் கட்டுரைகளுடன், வில்லேந்திய முருகன், சங்கு சக்கரம் தாங்கிய முருகன், அமிர்த கலசம் ஏந்திய முருகன், அருவுருவமான முருகன் என பல்வேறு தோற்றங்களில் உள்ள முருகன்கள் குறித்த கட்டுரையும் மலரை அலங்கரிக்கின்றன.

எழுத்தாளர்கள் மாலன், இரா.முருகன், தேவிபாலா உள்ளிட்டவர்களின் 21 சிறு கதைகள் வெவ்வேறு தளங்களில் பயணித்து மலரைச் சிறப்பிக்கின்றன. டாக்டர் ஜெ. பாஸ்கரின் ராஜஸ்தான் பயணக் கட்டுரையும், புகைப்பட கலைஞர் யோகாவின் தோஹா பயணக் கட்டுரையும், முத்துகளாக இடம் பெற்ற படங்களும் சிறப்பு. வாலாடி உலக நாயகி, லலிதா திரிபுரசுந்தரி, குக்கே சுப்ரமண்யா, அயோத்தி ராமர் ஆகிய படங்கள் வீட்டு பூஜையறையிலும் வைக்க உகந்தவை.

முழு கட்டுரையைப் படிக்க →