முகப்பு
நூல் அரங்கம்

விஜய பாரதம் தீபாவளி மலர்

சனாதனம் குறித்து என்ன சொல்கிறார் பாரதி? என்ற பத்மனின் கட்டுரை தகவல் களஞ்சியமாக ஒளிர்கிறது.

Updated On : 9 செப்டம்பர், 2025 at 5:15 AM
பகிர்:

விஜய பாரதம் தீபாவளி மலர் - 2024 - பி.வெள்ளைத்துரை; பக். 442; ரூ. 100; சென்னை 31; ✆044 - 26421271.

விஜயபாரதம் தேசிய வார இதழின் தீபாவளி மலர், ஆர்.எஸ்.எஸ். நூற்றாண்டு காணும் இந்த ஆண்டில் மலர்ந்திருப்பது கூடுதல் சிறப்பு.

இம்மலருக்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பாகவத், நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கியிருக்கிறார்கள். பெஜாவர் மடாதிபதி ஸ்ரீ விஸ்வபிரசன்ன தீர்த்த ஸ்வாமிகள், மதுரை ஆதினம் சம்பந்த தேசிகர், ஸ்ரீசுவாமி விவேகானந்த ஆஸ்ரமத்தின் சுவாமி அகிலானந்தா ஆசியுரைகளும் இடம் பெற்றுள்ளன.

ஆர். எஸ். எஸ். அமைப்பு நூற்றாண்டு காணும் இந்தக் காலகட்டத்தில் அது குறித்த கட்டுரைகள் வெளிவந்திருப்பது இன்றைய தலைமுறைக்கு அமைப்பு குறித்து விரிவாக அறிய உதவுகிறது. குறிப்பாக சங்கம் கடந்து வந்த பாதைகள் குறித்த காந்தமணி நாராயணனின் 'சங்கத்தில் குடும்பம், குடும்பத்தில் சங்கம்' என்ற கட்டுரை, ஸ்ரீ அருண்குமார் எழுதியுள்ள 'சமகாலம் ஏற்கும் நமது கருத்தியல்' என்ற கட்டுரை, ஜெ.ஸ்ரீராம் எழுதியுள்ள 'சமூகங்களை இணைத்து சுமுகமாக்கிய சங்கம்' என்ற கட்டுரை, 'நூற்றாண்டு காணும் ஆர். எஸ். எஸ்.' என்ற தலைப்பில் கோ. ஸ்தாணுமாலயன் எழுதியுள்ள கட்டுரை, இல. கணேசன் எழுதியுள்ள 'கம்யூனிஸம் வெறுப்பால் பிறக்கிறது' போன்ற கட்டுரைகள் குறிப்பிடத்தக்கவை.

சனாதனம் குறித்து என்ன சொல்கிறார் பாரதி? என்ற பத்மனின் கட்டுரை தகவல் களஞ்சியமாக ஒளிர்கிறது.

ராஜேஷ்குமார், விமலாராணி, வெ. தமிழழகன் உள்ளிட்டோரின் விருந்தளிக்கும் கதைகள், சிறுகதைகள் நிறைவாக பளிச்சிடுகின்றன.

முழு கட்டுரையைப் படிக்க →