முகப்பு
தமிழ்நாடு

நமக்கான வாகனம் நம்மருகே வந்துவிட்டது: ராமதாஸ்

பாமக தொண்டர்களுக்கு அந்தக் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் எழுதியுள்ள கடிதம்.

Updated On : 25 பிப்ரவரி, 2026 at 2:05 PM
ராமதாஸ் - கோப்புப் படம்
பகிர்:
Updated On : 25 பிப்ரவரி, 2026 at 1:52 PM

நமக்கான வாகனம் நம்மருகே வந்துவிட்டதாக பாமக தொண்டர்களுக்கு அந்தக் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

ராமதாஸ் தரப்பு பாமக, கூட்டணிக் குறித்து முடிவெடுக்காத நிலையில், தன்னுடைய கட்சித் தொண்டர்களுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார்.

Updated On : 25 பிப்ரவரி, 2026 at 1:57 PM

அந்தக் கடிதத்தில் ராமதாஸ் தெரிவித்திருப்பதாவது:

Advertisement

நாம் சற்றே நம் கடந்த காலத்தை திரும்பிப் பார்ப்போம். சமூகநீதி வரலாற்றில் தமிழ்நாட்டளவில் 4 இட ஒதுக்கீடுகள், தேசிய அளவில் 2 இட ஒதுக்கீடுகள் என மொத்தம் 6 இட ஒதுக்கீடுகளை நாம் தான் போராடி வென்றெடுத்தோம். சாதி, சமய, ஒற்றுமையுடன் அனைவரும் சகோதரர்களாக வாழ வேண்டி சமய சமுதாய நல்லிணக்க மாநாடுகளை நடத்தினோம்.

இன்னும் வெல்ல வேண்டியவை பெண்களுக்கான சம உரிமை, போதை இல்லா தமிழகம், ஏழைக்கும், பணக்காரனுக்கும் ஒரே மாதிரி கல்வி, ஒரே மாதிரி தரமான மருத்துவம், வேலைவாய்ப்பு, அனைவருக்கும் சொந்த வீடு, அனைவருக்குமான பொருளாதார முன்னேற்றம், விவசாயிகளை ஊக்கப்படுத்தி நஞ்சில்லா உணவு உற்பத்தி, நெரிசலற்ற போக்குவரத்திற்கான சாலைகள், பண வீக்கமற்ற பொருளாதார வளர்ச்சி, வன்முறை இல்லா பாதுகாப்பான வாழ்க்கை என ஏராளமான இலக்குகள் உள்ளன.

நம் பலம் அப்படியேதான் உள்ளது. உன்னை அறிந்தால், நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம் என்ற கவியரசர் கண்ணதாசன் பாடல் வரிகளுக்கேற்ப, நம்மை நாம் அறிந்து போராடி நமக்கான இலக்கை அடைவோம். சோர்வு என்பது நம் அகராதியிலே இல்லை.

Updated On : 25 பிப்ரவரி, 2026 at 2:02 PM

உங்கள் மனதளவில் சிறு கலக்கம் ஏற்பட்டுள்ளதை நான் அறிவேன். நாம் பயணிக்கவேண்டிய தூரம் நீண்டது. அதனால் கிடைக்கும் வாகனங்களில் பயணித்தால் இலக்கை அடையவே முடியாது.

நமக்கான வாகனம் இதோ நம் அருகே வந்துவிட்டது. அதில்தான் பயணிக்கப்போகிறோம். நம் இலக்கை அடைந்து இலட்சியத்தை வெல்வோம்.

எப்போதும் இணைந்தே இருப்போம். தொடர்ந்து உங்களோடு பேசுவேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

summary

In a letter written to PMK workers, party founder Ramadoss said that the vehicle for us has arrived.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.