ஒரு சொட்டு மதுவில்லாத தமிழகம்... தேர்தல் அறிக்கையை வெளியிட்ட ராமதாஸ்!
பாமக நிறுவனர் ராமதாஸ் தேர்தல் அறிக்கை வெளியிட்டது குறித்து...
எதிர்வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் அறிக்கையை அந்தக் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டார்.
சட்டப்பேரவைத் தேர்தலில் அன்புமணி தலைமையிலான பாமக, அதிமுக கூட்டணியில் இணைந்துவிட்ட நிலையில், ராமதாஸ் தலைமையிலான அணி திமுக தலைமையிலான கூட்டணியில் இணையும் என எதிர்பாா்க்கப்பட்டது. ஆனால் அந்த எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை.
இந்த நிலையில், கடந்த 10-ஆம் தேதி தைலாபுரத்துக்கு வந்த சசிகலா, மரியாதை நிமித்தமாக மருத்துவர் ராமதாஸை சந்தித்துப் பேசினார். தொடர்ந்து 13-ஆம் தேதி அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற தனது கட்சியின் பெயரையும் அவர் அறிவித்தார்.
Advertisement
Advertisement
இதையடுத்து, அந்தக் கட்சியின் பொதுச் செயலர் சசிகலா மீண்டும் தைலாபுரம் தோட்டத்துக்கு வந்து, பாமக நிறுவனர் ராமதாஸை சந்தித்துப் பேசினார்.
அப்போது நடைபெற்ற பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, சட்டப்பேரவைத் தேர்தலில் இரு கட்சிகளும் கூட்டணி அமைத்து போட்டியிடுவெதென முடிவு செய்யப்பட்டது. இதற்கான ஒப்பந்தத்தில் பாமக நிறுவனர் ராமதாஸும், அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலர் வி.கே.சசிகலாவும் கையொப்பமிட்டு, அதை பரிமாறிக் கொண்டனர்.
இந்தக் கூட்டணியுடன் இன்னும் சிலர் இணையவுள்ளதாகவும் 234 தொகுதிகளிலும் போட்டியிடவுள்ளதாகவும் ராமதாஸ் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், சட்டப்பேரவைத் தேர்தலுக்கான 101 பக்கங்களைக் கொண்ட தேர்தல் அறிக்கையை பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டார்.
அனைவருக்கும் தரமான, சுமையில்லாத, கட்டாய, கட்டணமில்லாத கல்வித் திட்டம், ஒரு சொட்டு மதுவில்லாத தமிழகத்தை உருவாக்குவது, மருத்துவ வசதியை மேம்படுத்துவது உள்ளிட்ட பல முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
மாதம் ஒருமுறை மின்சாரம் கணக்கீடு, மகளிருக்கு மாதம் ரூ. 3000, மகளிர் குழு வங்கிக்கடன் தள்ளுபடி உள்ளிட்ட வாக்குறுதிகளை ராமதாஸ் அறிவித்துள்ளார்.
The party's founder, Ramadoss, released the party's election manifesto for the upcoming 2026 assembly elections.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.