FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

அரசியல் துறவறம் அறிவித்தார் ராமதாஸ்!

எனது 88 ஆவது பிறந்த நாளில் இன்று முதல் அரசியல் துறவறம் மேற்கொள்கிறேன் என ராமதாஸ் பேசியிருப்பது குறித்து...

Updated On : 25 ஜூலை 2026, 12:59 pm IST
தைலாபுரம் தோட்டத்தில் தந்தை ராமதாஸ்
பகிர்:

சென்னை: எனது 88 ஆவது பிறந்த நாளில் இன்று முதல் அரசியல் துறவறம் மேற்கொள்கிறேன் என தெரிவித்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், இனி அரசியல் பேசமாட்டேன், அரசியலில் தலையிட மாட்டேன் அரசியலை அன்புமணி பார்த்துக்கொள்வார் என தெரிவித்துள்ளார்.

திண்டிவனம் அடுத்த கோனேரிக்குப்பம் பகுதியில் உள்ள சரஸ்வதி கல்லூரியில் பாமக நிறுவனர் ராமதாஸ் 88 ஆவது பிறந்த நாள் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கப்பதற்காக மருத்தவர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆகியோர் தைலாபுரம் இல்லத்தில் இருந்து ஒரே காரில் நிகழ்ச்சி புறப்பட்டு வந்தனர்.

Advertisement

Advertisement

விழாவில் ராமதாஸ் பங்கேற்று பேசியதாவது:

எனக்கு இன்று 88 ஆவது பிறந்த நாள். இன்று முதல் அரசியல் துறவறம் செய்கிறேன். இனி அரசியல் பேசமாட்டேன், அரசியலில் தலையிட மாட்டேன் அரசியலை அன்புமணி, அவரது துணைவியார் பார்த்துக்கொள்வார் .

என்னை பார்க்க வருபவர்கள், என்னிடம் அரசியல் பேச வேண்டாம், உங்களுக்கும் எனக்கும் உள்ள உறவு மாறாது என்று கூறினார்.

ராமதாஸ் , அன்புமணி இடையே கருத்து வேறுபாடு நிலவிய நிலையில் அண்மையில் இருவரும் சந்தித்துப் பேசிக்கொண்டனர்.

summary

Regarding Ramadoss's announcement that he is renouncing politics starting today, on his 88th birthday...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments