ஓம்சக்தி தீபாவளி மலர்
எப்போதும் பத்திரப்படுத்தி இந்த மலரைப் படிக்கலாம். பாதுகாத்தும் வைக்கலாம்.
ஓம்சக்தி தீபாவளி மலர் - ம.மாணிக்கம்; பக்.342; ரூ.100; சக்தி சுகர்ஸ் லிமிடெட், கோவை-641 018; ✆ 0422 4322471.
முதல் கட்டுரையாகவே, நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றிய ரத்தன் டாடா குறித்து 'ஏ டூ இசட்' தகவல்களை வெளியிட்டு, அவருக்கு இந்த மலர் பெருமை சேர்த்துள்ளது.
தீபாவளி ஏன் கொண்டாடுகிறோம், ராமரும் விநாயகரும் குறித்து மகா பெரியவர் உரை, பட்டினத்தார் உரை, பல்லவர் குடைவரைக் கோயில்கள், காசி அன்னபூரணி, மதுரை மீனாட்சி, ஏழூர் பல்லாக்கு, பொள்ளாச்சி முருகன் என ஆன்மிக கட்டுரைகள் படிக்கப் படிக்கப் பக்தி மணம் கமழ்கிறது. சுவாமி விவேகானந்தரின் தன்னம்பிக்கை உரை மனதுக்குப் புத்துணர்வை அளிக்கும்.
'எழுத்தாளர்களின் வாரிசுகள் எழுதிய சிறுகதைகள்' என்று புதிய முயற்சியாக, கார்த்திக் குமார் (ராஜேந்திரகுமார்), வினு தினேஷ் (என்.சி.மோகன்தாஸ்), ஸ்வர்ணரம்யா (பட்டுக்கோட்டை பிரபாகர்), ரஜனீஸ் (ரவி பிரகாஷ்), ஸ்ருதி பிரகாஷ் (தேவிபாலா) உள்ளிட்டோரின் சிறுகதைகள் சுவாரசியத்தை உண்டாக்குகின்றன.
வங்காள எழுத்தாளர் மகா ஸ்வேதாதேவி, 'ஜாய்ப்புல் சிங்கப்பூர் - கலர்புல் மலேசியா' என்ற பயணக் கட்டுரை, சென்னையின் தாகம் தீர்க்கும் ஏரிகள் கட்டுரை பல்வேறு புதிய தகவல்களை எடுத்துரைக்கின்றன. பிரபலங்கள் எவ்வாறு எழுதினார்கள் என்பது குறித்த திருப்பூர் கிருஷ்ணனின் கட்டுரை அபாரம். மொத்தத்தில் வாடாத மலர்கள் உண்டா என்றால் தீபாவளி மலர்கள்தான் என்பதற்கிணங்க, இப்போது மட்டுமல்ல; எப்போதும் பத்திரப்படுத்தி இந்த மலரைப் படிக்கலாம். பாதுகாத்தும் வைக்கலாம்.