முகப்பு
நூல் அரங்கம்

இசையரசி எம்.எஸ். சுப்புலக்ஷ்மி

இசையரசி எம்.எஸ். சுப்புலக்ஷ்மி பற்றி அறிந்துகொள்ளத் தமிழில் தரமான நூல்.

Updated On : 9 செப்டம்பர், 2025 at 5:15 AM
பகிர்:

இசையரசி எம்.எஸ். சுப்புலக்ஷ்மி - எஸ்.எம். உமர்; பக்.288; ரூ. 275; அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை -4; ✆ 92892 81314.

இசையரசி மதுரை சண்முகவடிவு சுப்புலக்ஷ்மி பற்றி எளிய வாசகரும் படிந்தறிந்து கொள்ளக் கூடிய அளவில் ஏராளமான விஷயங்களுடன் விறுவிறுப்பாகச் செல்கிறது இந்த நூல்.

அவரது மேன்மையான இசை வாழ்வின் சிறப்பான சம்பவங்கள் பெரும்பாலானவற்றைப் பதிவு செய்திருக்கிறார் நூலாசிரியர். திரைத்துறையைச் சேர்ந்தவர் என்பதுடன் அவரே எம்.எஸ்.ஸின் தீவிர ரசிகர் என்பதும் எழுத்தில் வெளிப்படுகிறது.

எம்.எஸ்.ஸின் குரல் எவ்வாறு இசைத்தட்டுகளின்வழி புகழ் பெறத் தொடங்கியது என்பதில் தொடங்கி, அவரை அடுத்தகட்டத்துக்கு நகர்த்தியதில் வீணை தனம்மாள் எவ்வாறு

செயல்பட்டார் என்பதை விளக்கும் ஆசிரியர், திருப்பு முனையான மகாமகக் கச்சேரிகள் பற்றியும் தெரிவிக்கிறார். திரையுலக நுழைவு, சதாசிவத்துடன் திருமணம் போன்றவற்றுடன், 'மீரா' திரைப்படத்தின் தாக்கம் எத்தகையது என்பதும் விவரிக்கப்படுகிறது.

மகாத்மா காந்தி, ஜவாஹர்லால் நேரு, லால் பகதூர் சாஸ்திரியிலிருந்து அப்துல் கலாம் வரையிலும் மிக உயர்ந்த தலைவர்கள் எம்.எஸ்.ஸின் குரலுக்கு எந்தளவுக்குத் தீவிர ரசிகர்களாக இருந்தார்கள் என்பதைத் தெரிவிக்கும் நிகழ்வுகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.

பிற மொழிகளிலும் எம்.எஸ். பாட காந்தி எவ்வாறு காரணமாக இருந்தார் என்ற தகவல் வியப்பளிக்கிறது. தேனாம்பேட்டை காங்கிரஸ் திடலில் நடைபெற்ற அகில இந்திய காங்கிரஸ் பொருள்காட்சியின் கலைநிகழ்ச்சியில் எம்.எஸ். கச்சேரி. கட்டணம் ஒருவருக்கு 25 காசுகள். அன்று ஒரு நாள் வசூல் (அந்தக் காலத்தில்) ரூ. 50 ஆயிரம்! அப்படியென்றால் எவ்வளவு ரசிகர்கள் திரண்டிருப்பார்கள்? அரிய புகைப்படங்களும் நூலில் சேர்க்கப்பட்டுள்ளன. உலகெங்கும் ஒளிர்ந்த, தமிழின், தமிழ்நாட்டின் அடையாளங்களில் ஒருவரான இசையரசி எம்.எஸ். சுப்புலக்ஷ்மி பற்றி அறிந்துகொள்ளத் தமிழில் தரமான நூல்.

முழு கட்டுரையைப் படிக்க →