முகப்பு
நூல் அரங்கம்

ஒரு பழைய காதல் கடிதம் (எனது 9-ம் வகுப்புத் தோழி)

திரை இயக்குநர் என்பதாலோ என்னவோ பல பக்கங்களும் எழுத்துகளின் வழியே காட்சிகளாகவே விரிகின்றன.

Updated On : 9 செப்டம்பர், 2025 at 5:15 AM
பகிர்:

ஒரு பழைய காதல் கடிதம் (எனது 9-ம் வகுப்புத் தோழி) - இயக்குநர் கஸ்தூரி ராஜா; பக். 788; ரூ. 1100, தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், மதுரை - 625 003; ✆1800 425 7700.

'காதல் பரிசு, அன்பு மனைவிக்கு' என்று குறிப்பிட்டு வாழ்வின் கதையை கவிதையாகவும் இல்லாமல் பனுவலாகவும் இல்லாமல் எழுதியிருக்கிறார் திரைப்பட இயக்குநர் கஸ்தூரி ராஜா. இலக்கெனக் குறித்துப் பகுதி பகுதியாக வரையறுத்துக் கொண்டாலும்கூட எவ்விதக் கட்டுத்திட்டமும் இல்லாமல் விரிவாக எழுதிக் கொண்டே சென்றிருக்கிறார் ஆசிரியர்.

வாழ்வை ஆறு பகுதிகள் எனப் பிரித்துக்கொண்டு பிறப்பு, இளமையிலிருந்து வாழ்ந்து முடிவது வரையிலும் தன் வரலாறு போலவே செல்லும் நூலில், 36 இயல்களாக வகுத்துக்கொண்டு நினைவுகளைப் பதிவு செய்திருக்கிறார். கடந்த காலத்தில் நிகழ்ந்த ஒவ்வொரு விஷயத்தைப் பகிரும்போதும் தன் கருத்துகளுடனும் நினைவுகளுடனும் பகிரும் ஆசிரியர், 'ஏன் என்றால்?' இயலில் பெண்கள் நிலை பற்றியொரு துயரத்தையும் விவரிக்கிறார். நீ... விரல்கொண்டு என்று எழுதத் தொடங்கி இளமைக் காலத்தையும் திருமணம் புகுதலையும் உற்சாகமாக விளக்குகிறார். இவ்வாறாக ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு விதமான விஷயங்கள்.

திரை இயக்குநர் என்பதாலோ என்னவோ பல பக்கங்களும் எழுத்துகளின் வழியே காட்சிகளாகவே விரிகின்றன. திரைப்படத் துறையினருக்கு மிகுதியும் தேவைப்படலாம். கடந்த காலத்தை முழுவதுமாக மீண்டும் அசை போட்டதைப் போலச் செல்லும் மிக நீண்டதான இந்தக் காதல் கடிதத்தின் முடிவு மிகுந்த அழுத்தம் தருவது.

முழு கட்டுரையைப் படிக்க →