ஒளவை சொல் கேளீர்
அனைத்து வயதினரும் வாசிக்க வேண்டிய நூல்.
ஒளவை சொல் கேளீர் - டாக்டர் வி.ஜி. சந்தோஷம்; பக். 208; ரூ. 200; சந்தனம்மாள் பதிப்பகம், சென்னை -15; ✆044 - 6625 9999.
சங்க கால பெண் புலவர்களில் தன்னிகரற்ற பெருமை கொண்ட ஒளவையின் நூல்கள், வாழ்க்கை நிகழ்வுகள், சமுதாயச் சிந்தனைகள் உள்ளிட்டவற்றை எளிய நடையில் சுவைபடச் சொல்கிறது இந்த நூல். ' என்றும் பதினாறு' என பெரியவர்கள் வாழ்த்துவதைப் போல பயனுள்ள பதினாறு கட்டுரைகளின் தொகுப்பு இது.
சங்கம் வளர்த்து சரித்திரம் படைத்த தமிழ் மொழியின் பெருமைகளையும், சங்ககாலப் பெண் புலவர்கள் குறித்தும் முதல் மூன்று கட்டுரைகள் வழியே அறிமுகவுரை தருகிறார் ஆசிரியர்.
சமுதாயம், தனிமனித ஒழுக்கம், கல்வி, பெண்ணின் பெருமை, அறச் சிந்தனைகள் போன்றவற்றை வலியுறுத்தும் ஒளவையின் பாடல்களை திருக்குறள், சங்ககால இலக்கியங்கள், ஐம்பெருங் காப்பியங்கள், தேவாரம், திருவாசகம் போன்றவற்றின் கருத்துகளுடன் ஒப்பிட்டு விளக்கியுள்ளது ஆசிரியரின் பரந்துபட்ட தமிழ் இலக்கியங்கள் மீதான காதலை வெளிப்படுத்துகிறது. ஒளவையின் பாடல் வரிகளை விளக்குகையில் தேம்பாவணியிலிருந்தும், பாரதி, பாரதிதாசனின் பாடல்களில் இருந்தும் வரிகளை மேற்கோள் காட்டியுள்ளது புதுமையான முயற்சி.
'பாரி மகளிரும் ஒளவையின் பரிவு உள்ளமும், ஒளவையாரும் அதியமான் நெடுமான் அஞ்சியும், ஒளவையாரின் தனிப்பாடல்கள் ஆகிய கட்டுரைகள் குறுங்காப்பியங்களோ என சொல்லத்தக்க அளவில் கூடுதல் சுவையுடன் உள்ளன. அறத்தால் வருவதே இன்பம், நெஞ்சில் சூடத்தக்க மலர்கள், ஒளவையார் காண விழைந்த சமுதாயம் ஆகிய கட்டுரைகளும் பல்வேறு சீரிய கருத்துகளை உள்ளடக்கியுள்ளன.
அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டி குறுகத் தரித்தது என குறளின் பெருமையைக் கூறினார் ஒளவையார். அவரது பாடல்களைத் துளைத்து தமிழின் இனிமை வழியே புதிய
சிந்தனையைத் தூண்டுகிறது இந்நூல். அனைத்து வயதினரும் வாசிக்க வேண்டிய நூல்.