கல்விக்கூடங்களில் சமத்துவம்
சமுதாயத்திலும் சாதிப் பாகுபாடுகளைக் களைய இதுபோன்ற எண்ணற்ற நூல்கள் வெளிவர வேண்டும்.
கல்விக்கூடங்களில் சமத்துவம் - தொகுப்பாசிரியர் ரவிக்குமார்; பக். 120; ரூ. 150; மணற்கேணி பதிப்பகம், விழுப்புரம் - 605403; ✆6382794478.
முன்னெப்போதுமில்லாத வகையில் கல்வி நிலையங்களில் ஜாதிப் பிரச்னை அதிகரித்துவரும் நிலையில், நிகரி - சமத்துவ ஆசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களில் சிலருடைய உரைகளும் யோசனைகளும் இங்கே நூலாக்கப்பட்டுள்ளன. நான்குநேரியில் ஜாதிப் பிரச்னை காரணமாக, ஒரு பள்ளி மாணவன் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஜாதிய பாகுபாடுகளைக் களையும் நோக்கில் தமிழ்நாடு அரசின் சார்பில் அமைக்கப்பட்ட நீதிபதி கே. சந்துரு குழுவின் பரிந்துரைகளும் நூலில் இடம் பெற்றுள்ளன.
'தேசியக் கல்விக் கொள்கையும் வகுப்பறைப் பாகுபாடுகளும்' பற்றிய கட்டுரையில், தேசிய ஆலோசனைக் குழு அமைத்த துணைக்குழுவின் வெளியிடப்படாத பிரகடனத்தைப் பற்றிக் குறிப்பிடுகிறார் நூலாசிரியர்.
ஜாதியக் கடத்தலைப் பற்றித் தன்னனுபவம் வழி கூறும் இரா. அறவேந்தன், கிராமங்களிலும் கல்வி நிலையங்களிலுமாக மாணவர்கள், ஆசிரியர்கள் இடையிலான உறவுகளை விளக்குவதுடன் ஆசிரியர்களுக்கு (இன்றைய அவசிய) தேவையான பக்குவத்தையும் குறிப்பிடுகிறார். 'கல்வி நிலையங்களில் சாதி' பற்றிய கட்டுரையில், வரலாற்றுடன் சான்றோர்களின் எண்ணங்களையும் பதிவு செய்து, கல்வி பற்றிப் பெரியார் குறிப்பிடுவதை இங்கே நடைமுறைப்படுத்தினாலே (... பகுத்தறிவும் நேர்மையும் நாணயத்தையும் கொண்டவனாகப் பிறருக்கு உதவி வாழும் நடைமுறைகளைக் கற்பிக்க வேண்டும்) இங்கே ஜாதி உணர்வு மங்கும் என்று கி. நாச்சிமுத்து குறிப்பிடுகிறார்.
12 பேரின் கருத்துரைகளுடன் சந்துரு குழு பரிந்துரைகளும் இணைந்த சிறந்த தொகுப்பு. சமுதாயத்திலும் சாதிப் பாகுபாடுகளைக் களைய இதுபோன்ற எண்ணற்ற நூல்கள் வெளிவர வேண்டும்.