முகப்பு
நூல் அரங்கம்

சிகா

வித்தியாசமான பார்வையில் ஓர் புதினம்.

Updated On : 9 செப்டம்பர், 2025 at 5:15 AM
பகிர்:

சிகா- எஸ்ஸார்சி; பக். 520; ரூ.600; சுவடு பப்ளிஷர்ஸ், சென்னை- 73; 95510 65500.

எஸ்ஸார்சி என்ற புனை பெயரில் எழுதிவரும் எஸ்.ராமச்சந்திரன், 'சிகா' என்கிற புதினத்தை தனக்கே உரிய பாணியில் வட்டார பேச்சுத்தமிழ் நடையில் புதின கதாபாத்திரங்களின் சாதிய ரீதியிலான வார்த்தைக்கலவைகளுடன் யதார்த்தமாக படைத்திருக்கிறார்.

குருக்கள் சமுதாயத்தை சார்ந்த கதாபாத்திரத்தை உள்ளடக்கிய இந்தப் புதினம், வித்தியாசமான பார்வை என்றே சொல்லலாம். கடவுளுக்கு படைக்கும் தொழில் செய்யும் குருக்கள் சமுதாயம் சார்ந்த வேதா என்கிற குருக்கள் வீட்டு பெண், ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே படிக்க அனுமதிக்கப்படுகிறாள்.

அவளுக்கு படிப்பின் மீது இருந்த வெறியின் காரணமாக கடும் சவால்களைச் சந்தித்து மேல்நிலைக்கு வருகிறாள். அவளுக்கு ஒரு தமிழ்ப் பேராசிரியரும் உதவுகிறார். வேதாவின் கதைதான் இந்த சிகா.

சமுதாயத்தின் மேல்தட்டு சாதியினரால் புறக்கணிக்கப்பட்டு, அதே நேரத்தில் பிற கீழ்தட்டு சாதியினரால் உயர்ந்தவர்கள் என்று தவறாகக் கருதப்பட்டு இருதரப்புக்கும் இடையில் அல்லல்படும் சமுதாயம் சார்ந்த இந்த புதினத்தில் வரும் புரோகிதர் கதாபாத்திரம் தொடங்கி வேதா வரை அனைத்தும் எஸ்ஸார்சியின் கற்பனை கலந்த சமுதாய போக்கு சார்ந்த யதார்த்தம் என்றால் அதில் மிகையில்லை.

கோயில்களில் நீடிக்கும் பாகுபாடுகள், சம்பாஷணைகள் என அனைத்தும் இந்த புதினத்திற்கு வலு சேர்க்கின்றன.

மண் மணத்துடன் கூடிய சமூக சிந்தனை சார்ந்த இந்த புதினம் படிப்பவர்களுக்கு சர்க்கரை பொங்கல் என்றுதான் சொல்ல வேண்டும்.

முழு கட்டுரையைப் படிக்க →