முகப்பு
நூல் அரங்கம்

சுற்றுச்சூழலை உற்று நோக்குங்கள்

அறிவியல்பூர்வமான விஷயங்களோடு, ஆக்கபூர்வ செயல்பாடுகளை மேற்கொள்வதன் அவசியத்தை உணர்த்துகிறது.

Updated On : 9 செப்டம்பர், 2025 at 5:15 AM
பகிர்:

சுற்றுச்சூழலை உற்று நோக்குங்கள்- வி.என்.சாமி, டாக்டர் டி.எஸ்.சந்திரசேகர்; பக்.320; ரூ.600; சாவிரஷ் பப்ளிஷர்ஸ், சென்னை-34; ✆98400 53938.

மூத்த பத்திரிகையாளரான வி.என்.சாமி இருபதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். அவரது சிறப்பான நூல்களில் இதுவும் ஒன்று.

உலகை அச்சுறுத்துவது காலநிலை மாற்றமும், சுற்றுப்புறச் சூழலும்தான். இதில், நீர், காற்று, காடுகள், ஒலி, கதிரியக்க மாசு.. என அனைத்து வகை மாசுக்களையும் கூறி, அவற்றை நீக்கும் வழிமுறைகளை உலக நாடுகள் மேற்கொள்வதற்கான வழிமுறைகளை எடுத்துரைத்திருக்கிறார்.

மனிதன் இயற்கையோடு ஒருங்கிணைந்து வாழ வேண்டியதன் அவசியத்தையே வலியுறுத்தும் நூலாசிரியருக்கு உறுதுணையாக, சர்வதேசப் புகழ் பெற்ற மருத்துவர் பத்மஸ்ரீ டி.எஸ்.சந்திரசேகர் மாசுபாட்டால் மருத்துவத் துறையில் சந்திக்கும் சவால்கள், அதைத் தீர்க்கும் வழிமுறைகளையும் விளக்க உதவி புரிந்துள்ளார்.

உலக சுற்றுச்சூழல் தினம், நீராதாரங்கள், தண்ணீர் மாசுபடுதல், காற்று - வாயு, தில்லியில் காற்று மாசுபாடு, ஒஸோன், அணு ஆயுதச் சோதனைகளால் ஏற்படும் ஆபத்துகள், சுற்றுச்சூழல் பராமரிப்புக்கு உதவும் எறும்புகள், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் நுண்ணுயிர்களின் பங்கு, ஒலி மாசால் ஏற்படும் தீமைகள், மண்வளம் மாசுபடாமல் காப்போம், நதிநீர் மாசுபாடு, வன வளம் காத்தல், நாள்தோறும் சேரும் குப்பைகள் என 16 கட்டுரைகளில் இடம்பெற்றுள்ள தகவல்கள் எண்ணற்றவை.

அறிவியல்பூர்வமான விஷயங்களோடு, ஆக்கபூர்வ செயல்பாடுகளை மேற்கொள்வதன் அவசியத்தை உணர்த்துகிறது.

இளைய தலைமுறையினருக்கு சுற்றுப்புறச் சூழல் குறித்து விழிப்புணர்வை அடையச் செய்ய இந்த நூல் பாட நூல்களில் இடம்பெற வேண்டியது அவசியம்தான்.

முழு கட்டுரையைப் படிக்க →