ஏலியன் வேட்டை
வேற்று கிரக வாசிகள் மீதான சந்தேகங்கள் குறித்து அறிய விரும்புவோருக்கு இந்நூல் வரப்பிரசாதம்.
ஏலியன் வேட்டை: ரகு ராமன்; பக்.144; ரூ.170; கிழக்கு பதிப்பகம், சென்னை-14; ✆ 95000 45609.
பல்லாயிரம் ஆண்டுகளாக வானத்துக்கு அப்பால் உள்ள மர்மங்களைக் கண்டறியும் முயற்சியில் மனிதன் ஈடுபட்டு வருகிறான். இன்றைய நவீன கருவிகள் மூலம் கருந்துளை ரகசியம் வரை கண்டறிந்தாலும், வேற்று கிரக வாசிகள் குறித்த ஆராய்ச்சியின் முடிவுகள் தற்போது வரை புதிராக உள்ளது.
பூமியை ஏலியன் கண்காணிக்கிறதா? பூமிக்கு மேல் பறக்கும் தட்டுகள் தென்படுகிறதா? உள்ளிட்ட ஏலியன் மற்றும் பறக்கும் தட்டுகள் மீதான மர்மங்களுக்கு விடையளிக்கும் வகையில் இந்நூல் அமைந்துள்ளது.
குறிப்பாக, விண்ணில் பறக்கும் தட்டுகள் தென்பட்டதாக பல்வேறு விமானிகள் கூறும் தகவல்களும், அமெரிக்கா, பிரான்ஸ் ராணுவம் ஏலியனைத் தேடுவதையும் நூலாசிரியர் பதிவு செய்துள்ளார். முற்றிலும் அறிவியல் பூர்வமான தகவல்களைக் கொண்டிருந்தாலும் ஒரு துப்பறியும் நாவலை போல் ஏலியன் குறித்த ஆச்சரியமூட்டும் தகவல்கள் நூல் முழுக்கத் தரப்பட்டிருக்கின்றன.
அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் மட்டுமின்றி, பல்வேறு நாடுகளும் சிறப்பு குழு அமைத்து அடையாளம் தெரியாத பறக்கும் பொருள் குறித்து ஆராய்ந்து வருகின்றனர். தற்போது வேற்று கிரக வாசிகளைத் தொடர்பு கொள்வதில் உள்ள சவால்களைப் பதிவு செய்யத் தவறவில்லை. ஏலியன் குறித்த ஆராய்ச்சி நூலாக இது இருந்தாலும், எளிய நடையிலும், அறிவியல் சொற்களை விளக்கங்களுடன் கொடுத்துள்ளதும் சிறப்பு. இந்நூல் ஏலியன் மீதான மர்மத்தை விளக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
அறிவியல் உலகில் பிரபஞ்சம் சார்ந்த தகவல்கள் மற்றும் வேற்று கிரக வாசிகள் மீதான சந்தேகங்கள் குறித்து அறிய விரும்புவோருக்கு இந்நூல் வரப்பிரசாதம்.