SWAMINATHAN
நூல் அரங்கம்

பாட்ஷா உடன் நான்

அவர் தனக்கும் ரஜினிகாந்துக்கும் இடையேயான நட்பு குறித்து எழுதியுள்ள நூல் இது.

தினமணி செய்திச் சேவை

பாட்ஷா உடன் நான்-சுரேஷ் கிருஷ்ணா; மாலதி ரங்காராஜன்; பக். 240; ரூ.300; அல்லயன்ஸ் பதிப்பகம், சென்னை- 600 004, ✆ 044-2464 1313.

இந்திய திரை உலகின் ஜாம்பவான்களான எல்.வி.பிரசாத், கே.பாலசந்தர், தாசரி நாராயண ராவ் போன்றோரிடம் துணை இயக்குநராக பயணத்தைத் தொடங்கிய இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உள்பட 50 படங்களை இயக்கியுள்ளார். ஆனாலும், ரஜினிகாந்த் நடித்த அண்ணாமலை, பாட்ஷா ஆகிய திரைப்படங்களை அவர் இயக்கி தமிழகத்தில் சுரேஷ் கிருஷ்ணா புகழ்பெற்றார். அவர் தனக்கும் ரஜினிகாந்துக்கும் இடையேயான நட்பு குறித்து எழுதியுள்ள நூல் இது.

குறிப்பிட்ட அந்த இரு படங்களின் பாடலாசிரியரான கவிஞர் வைரமுத்துவும், இசையமைப்பாளரான தேவாவும் இந்தப் புத்தகத்துக்கு அணிந்துரை அளித்துள்ளனர். 1990-களில் வெளியான இந்தத் திரைப்படங்கள் உருவான புள்ளி எது? இந்த பெரும் சாதனையாளர்கள் எவ்வாறு ஒன்றிணைந்தார்கள் என்பது குறித்தும், வீரா திரைப்படத்தில் இளையராஜா இசையமைக்க ஒப்புக் கொண்டது குறித்தும் சுவாரஸ்யமாக பதிவு செய்துள்ளார் நூலாசிரியர்.

மாபெரும் வெற்றியடைந்த இரு திரைப்படங்களில் பின்னணியில் நடைபெற்ற சுவாரஸ்யமான சம்பவங்கள், உருவாக்கும் போது ஏற்பட்ட சந்திப்புகள், உரையாடல்கள், மாற்றி அமைக்கப்பட்ட காட்சி அமைப்புகள், சேர்க்கப்பட்ட வசனங்கள், நீக்கப்பட்ட காட்சிகள் என ரஜினிகாந்த் கவனத்துக்கு வந்து அவரை மையப்படுத்தி ஏராளமான தகவலுடன் இந்தப் புத்தகம் வெளிவந்திருக்கிறது.

மலரும் நினைவுகளாக வந்திருக்கும் இந்த நூலில் திரைத் துறையை ரசிக்கும் வாசகருக்கு ஏராளமான தகவல்கள் உள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

4-வது நாளாகத் தொடரும் இடைநிலை ஆசிரியகள் போராட்டம்! சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கைது!

வெல்லும் தமிழ்ப் பெண்கள் மாநாட்டிற்காக கோவை வந்த முதல்வர் ஸ்டாலின்!

டாடாநகர் விரைவு ரயிலில் தீ விபத்து! ஒருவர் பலி!

பெண்களுக்கான இடஒதுக்கீட்டை பாஜக விரும்பவில்லை: மு.க. ஸ்டாலின்

மாரடைப்பு... இதையெல்லாம் சாப்பிடக் கூடாது!

SCROLL FOR NEXT