இன்றைய ஆப்பிரிக்கா
ஆர்வத்தைத் தூண்டும் விதமாக படைத்திருக்கும் இந்நூலை அனைவரும் வாசித்து மகிழலாம்.
இன்றைய ஆப்பிரிக்கா - முனைவர் அ.பிச்சை; பக்:232; ரூ.260; நியூஸ்மேன் பப்ளிகேஷன்ஸ், மதுரை-20; ✆ 0452-4396667.
ஆப்பிரிக்கா கண்டம் குறித்து 10 பிரிவுகளில் வெவ்வேறு எழுத்தாளர்களின் ஆராய்ச்சிக் கட்டுரைகளின் தொகுதி இந்நூல். ஆப்பிரிக்காவின் இயற்கையமைப்பு, இயற்கை வளம், பழங்குடி
சமுதாயம், அரசியல் வரலாறு, தொழில்கள், மொழிகள், கலையும் இலக்கியமும், ஆப்பிரிக்க சினிமா, ஆப்பிரிக்க நாகரிகமும் பண்பாடும், ஆப்பிரிக்காவின் எதிர்காலம் போன்ற
பிரிவுகளில் விளக்கமாக பல்வேறு வியப்பூட்டும் தகவல்கள் தொகுத்தளிக்கப்பட்டிருக்கின்றன.
இதேபோன்று, இன்றைய இலங்கை, இன்றைய ஐரோப்பா, இன்றைய ஆசியா, இன்றைய வட அமெரிக்கா, இன்றைய இஸ்லாம், இன்றைய அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் பல ஆராய்ச்சி நூல்கள் போன்ற ஏராளமான உலக அறிவு நூல்களை நூலாசிரியர் வெளியிட்டுள்ளார்.
மனித இனம் முதலில் ஆப்பிரிக்காவில்தான் தோன்றி, பல்வேறு குழுக்களாகப் பிரிந்து உலகம் முழுவதும் பரவத் தொடங்கியது, ஆப்பிரிக்காவே இன்று தங்க ஏற்றுமதியில் முதலிடம் பெறுவது, திராவிடருக்கும் ஆப்பிரிக்கருக்கும் உள்ள தொடர்புகள் நீண்டகாலமாக இருப்பது உள்ளிட்ட பல அரிய செய்திகள் காணக்கிடைக்கின்றன. ஆப்பிரிக்கராலும், ஆப்பிரிக்கப் பழமைச் சான்றுகளாலும், பல்லாங்குழி ஆட்டம் ஆப்பிரிக்காவின் தேசிய விளையாட்டு என்று கருதப்படுகிறது போன்ற புதிய பல தகவல்களும் உள்ளன.
ஆப்பிரிக்க வாழ்க்கையைப் பற்றியும் அங்கு வாழும் மக்கள் எதிர்கொள்ளும் அரசியல் பிரச்னைகள் குறித்தும், சர்வாதிகார ஆட்சிகளும் இராணுவ ஆட்சிகளும் தலை தூக்கியது குறித்தும், இயற்கையாக அமைந்த அதிசயமான சுற்றுலாத் தலங்கள் குறித்தும் மிகுந்த ஆர்வத்தைத் தூண்டும் விதமாக படைத்திருக்கும் இந்நூலை அனைவரும் வாசித்து மகிழலாம்.