அறிதோறு அறியாமை
சிந்தனைக்குத் தீனி போடும் நூல்.
அறிதோறு அறியாமை - இரா.நரேந்திர குமார்; பக்.450; ரூ.500; காவ்யா, சென்னை-24; 044- 2372 6882.
அறிதோறு அறியாமை என்பது நூல்களைப் படிக்கும்போது புதிதாக நாம் தெரிந்து கொள்கிறவை, நாம் எவ்வளவு அறியாமையோடு இதுநாள்வரை இருந்திருக்கிறோம் என்பதை நமக்குத் தெரியப்படுத்துகின்றன என்பதே குறள் (1110). இதற்கு உதாரணமாக, மதுராந்தகம் கோதண்டராமரை வணங்கச் சென்றபோது, காணிக்கையாக என்ன கொண்டு செல்வது என்று கம்பர் யோசிக்கிறார் என்றும் தனது அறியாமையையே நிவேதனமாக்குகிறார் என்றும் கூறும் நூலாசிரியர், ஒருவர் தொடர்ந்து தன்னைப் புதுப்பித்துக்கொண்டே இருக்க வாசித்தலால் மட்டுமே முடியும் என்றும் வலியுறுத்துகிறார்.
தான் கற்றதை எடுத்துச் சொல்லி, தான் பெற்றதைப் பல்வேறு நூல்களின் துணை கொண்டு விளக்குகிறார். இவ்வாறு 20 கட்டுரைகளில் இவரது தேடல் அமைந்துள்ள நூல்கள் பட்டியலைப் பாருங்கள்: எஸ்.என்.நாகராஜனின் 'கிழக்கு வெல்லும்', கருணாநிதியின் 'கொலைக்களம்', ஆ.இரா.வேங்கடாசலபதியின் 'திராவிட வரலாறு' குறித்த ஆய்வுக் கட்டுரை, 'என்ன ஆனது ஆறுமுக நாவலரின் விவிலிய மொழிபெயர்ப்பு', 'தென்காசி ஆவுடையக்காள் பாடல்கள், நம்மாழ்வார் பாசுரம்', 'இடைவெளி' எஸ்.சம்பத் குறித்த சி.மோகன் கட்டுரை, அ.மார்க்ஸ், இமையம், வண்ணநிலவன், நக்கீரன், நா.காமராசன், காவ்யா சண்முகசுந்தரம் ஆகியோரின் படைப்புகளை அலசி ஆராய்ந்து, நூலாசிரியர் எடுத்து வைக்கும் கருத்துகள் ஏற்கத்தக்கதாகவே உள்ளன.
காசி ஆனந்தனின் கவிதை நூல் வெளியீட்டு விழா சென்னை வாணி மஹாலில் நடைபெற்றபோது, விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் பார்வையாளர் பகுதியில் அமர்ந்திருக்க, அப்போதுதான் அவரும் ஓவியர் வீர.சந்தானமும் அறிமுகமாயினர். இதுபோன்ற பல தகவல்கள் ஒவ்வொரு கட்டுரையிலும் இடம்பெற்றுள்ளன. சிந்தனைக்குத் தீனி போடும் நூல்.