முகப்பு
நூல் அரங்கம்

ரெளத்திரம் பழகு

பிரச்னைகளைக் கையாள்வதற்கான வழிகாட்டி இந்நூல்.

Updated On : 9 செப்டம்பர், 2025 at 5:15 AM
பகிர்:

ரெளத்திரம் பழகு - வழக்குரைஞர் சுமதி; பக்.280; ரூ.260; அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை-4; 044-2464 1314.

வழக்குரைஞரான நூலாசிரியர் வழக்குக்காக வரும் பல்வேறு சாதாரண மனிதர்களின் பிரச்னைகளைப் பற்றி எழுதியுள்ள நூல். 90-களில் துக்ளக் இதழில் வெளியிடப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பான இந்நூல், இப்போது மூன்றாம் பதிப்பைக் கண்டிருக்கிறது.

சாலையில் குழந்தையைக் கையில் ஏந்தி பிச்சை எடுப்பதைப் போல நடித்து கஞ்சா விற்ற பெண், குடிகார கணவனின் கொடுமையில் பாதிப்படைந்தாலும் சுயமாக வாழ தைரியமில்லாத பெண், திரைப்படத்தில் நடிப்பதற்கு ஆசை காட்டியதால் கணவனைவிட்டு இன்னொருவனை நம்பி வீட்டைவிட்டு வெளியேறிய பெண், குறிப்பிட்ட சில பள்ளிகளில் மட்டுமே தங்களுடைய பிள்ளைகள் படிக்க வேண்டும் நினைக்கும் பெற்றோர்கள், இளம்வயது பள்ளிச் சிறுமிக்குப் பூப்புனித விழா நடத்துவதைப் பெருமையாக நினைப்பவர்கள், மகனைக் கண்டிப்பாக வளர்ப்பதாக நினைத்து அவனுடைய வளர்ச்சியை முடக்கும் தந்தை, தன் காதல் ஒருதலைக் காதலானதால் உயிரைவிடும் இளைஞன் என நாம் அன்றாடம் சந்திக்கும், கேள்விப்படும் பல மனிதர்களின் பிரச்னைகளுக்கான காரணங்களையும், அவற்றுக்கான நடைமுறை சார்ந்த தீர்வுகளையும் இந்நூல் தெளிவாக முன் வைக்கிறது.

ஒட்டுமொத்த சமுதாயத்தில் நிலவுகிற பல்வேறு பொதுவான சூழ்நிலைகளால் தனிமனிதர்களின் வாழ்வில் ஏற்படும் பிரச்னைகள் ஒருபுறம், ஒவ்வொரு தனிமனிதரின் தனிப்பட்ட மனநிலைகளால் ஏற்படும் பிரச்னைகள் இன்னொருபுறம் என பிரச்னைகளில் சமூகம் மூழ்கிக் கிடக்கிறது. பிரச்னைகளை எவ்வாறு அணுகுவது, அவற்றிற்கான நடைமுறை சார்ந்த தீர்வுகள் எவை, பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதற்கு தடையாக இருக்கின்றவை எவை, அவற்றை எவ்வாறு எதிர்கொள்வது என்பதைப் பற்றி நூலாசிரியர் மிகச் சிறப்பாக, மிக எளிமையாக விளக்கியிருக்கிறார். பிரச்னைகளைக் கையாள்வதற்கான வழிகாட்டி இந்நூல்.

முழு கட்டுரையைப் படிக்க →