மின்சார சட்டம் - பி.விஜய் கிருஷ்ணா, ஏ.ஜெகநாதன்; பக்.160; ரூ.170; ராஜாத்தி பதிப்பகம், சென்னை-24; ✆ 044-2483 4663.
கம்ப்யூட்டர், வீட்டு உபயோகப் பொருள்கள், மருத்துவ உபகரணங்கள் போன்ற சாதனங்களுக்கு மின்சாரம் தேவைப்படுகிறது. இந்த நவீன கருவிகள் நம்மை மகிழ்விக்கின்றன. நமது வாழ்வைப் பாதுகாப்பதோடு நாட்டின் உற்பத்தித் திறனையும் அதிகரிக்க மின்சாரம் உதவுகிறது. மின்சாரம் இல்லாத நவீன வாழ்க்கையை உண்மையில் யாராலும் கற்பனை செய்து பார்க்கவே முடியாது.
மின்சாரம் குறித்த சட்டத் தகவல்கள் இந்த நூலில் இடம்பெற்றுள்ளன. மின்சாரம் என்றால் என்ன, தற்காலிக மின் கட்டணம் கணக்கிடும் முறை, புதிய விண்ணப்பத்தின் மாதிரி, கிலோ வாட் என்றால் என்ன, மின் அதிர்ச்சி ஏற்படாமல் தவிர்ப்பது எவ்வாறு, இன்வெர்ட்டர் வாங்கப் போகிறீர்களா? ஒரு நிமிஷம் - என மின்சாரம் தொடர்பான பல தகவல்களை அனைவரும் தெரிந்து கொள்ள இந்நூல் உதவுகிறது.
குறிப்பாக, மின்சாரம் சம்பந்தப்பட்ட நமது புகார்களை எங்கு அளிக்க வேண்டும், மின்சார குறைதீர் முறை மன்ற நடுவத்தின் முகவரி என்ன, புதிய இணைப்புப் பெறுவது எப்படி, மின் மீட்டரில் பிரச்னை இருந்தால் என்ன செய்ய வேண்டும், மின் கட்டணத்தை முன் பணமாகச் செலுத்தலாமா என மின்சாரம் குறித்து பொதுவாக நம் மனதில் எழும் பல கேள்விகள் இந்நூலில் கேட்கப்பட்டு, அதற்கான பதில்களும் இடம் பெற்றிருப்பது சிறப்பு. நூலின் இறுதியில் அளவுருக்கள், ஆளுகை அமைப்பு, இணை மின் உற்பத்தி, பதிவுக்கருவி, புதை மின் வடங்கள், மண்டல மின் திறன் குழு போன்ற மின் அருஞ்சொற்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
இன்றையச் சூழலில் வீட்டு உபயோகம், தெரு விளக்கு, மேல்நிலை தண்ணீர்த் தொட்டி, கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள், குடிசைத் தொழில் பகுதி, விவசாயம் ஆகியவை உள்பட 11 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு மின் இணைப்பு வழங்கப்படுகிறது. நாம் இதில் ஏதாவது ஒன்றிலோ அல்லது அதற்கும் மேற்பட்ட பிரிவுகளிலோ மின்சாரத்தை கட்டாயம் பயன்படுத்தி வருகிறோம். எனவே அது குறித்த தெளிவான, பயனுள்ள தகவல்களை அறிவதற்கு இந்த நூல் நிச்சயம் உதவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.