முகப்பு
நூல் அரங்கம்

பழந்தமிழ்

திராவிட மொழிகளில் கிடைத்த இலக்கியங்களின் விவரங்களும் குறிப்பிடப்பட்டுள்ளது, சிறப்பு.

Updated On : 9 செப்டம்பர், 2025 at 5:15 AM
பகிர்:

பழந்தமிழ் - பேராசிரியர் சி.இலக்குவனார்; பக்.191; ரூ.200; மணிவாசகர் பதிப்பகம், சென்னை-21; ✆ 93805 30884.

தமிழின் தொன்மை குறித்து நுட்பமாகவும், உரிய தரவுகளுடன் நூலாசிரியர் தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். பேச்சு மொழி, எழுத்து மொழி மற்றும் மொழிக் குடும்பங்கள், தமிழ்ச் சொற்கள் பிற மொழிகளில் கையாளப்படும் விதம் குறித்து தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.

பண்பட்ட இலக்கணமும், இலக்கியங்களையும் கொண்டுள்ளதால் காலத்தை வென்று தமிழ் வாழ்கிறது.

திராவிட மொழிக் குடும்பங்களுக்கு தமிழைத் தாய் என்றும், தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகளில் தமிழ்ச் சொற்கள் மருவி வழங்கப்படுவது குறித்தும் சான்றுகளுடன் எடுத்துக்காட்டப்பட்டுள்ளன.

தொல்காப்பியர் காலத்துக்கு முன்பே தமிழில் இலக்கியங்கள், இலக்கணங்கள் தோன்றியிருந்தன. அவற்றின் துணையால் தொல்காப்பியர் தனது நூலை இயற்றினார் என்பதிலிருந்து தமிழின் தொன்மையை அறியலாம். தமிழ் இலக்கியங்கள்தாம் பிற இந்திய மொழி இலக்கியங்களுக்கு முன்னோடி என்ற தகவலும், திராவிட மொழிகளில் கிடைத்த இலக்கியங்களின் விவரங்களும் குறிப்பிடப்பட்டுள்ளது, சிறப்பு.

இந்திய நாகரிகத்தின் பெரும் பகுதி பழந்தமிழர் நாகரிமே என்பதை, தமிழ் இலக்கியங்களில் காணப்படும் தமிழர் வாழ்வு, பண்பாடு, வாழ்வியல் முறை, வணிகம் போன்றவை பற்றிய குறிப்புகளால் அறியலாம். இலக்கியத்தின் சிறப்புகளையும், இன்றியமையாமையையும் அறிந்தே நமது முன்னோர்கள் மொழிக் கூறுபாடுகளுள் இலக்கியத்தை இணைத்துள்ளனர். அவை தமிழ் மக்களின் வரலாற்றை அறிய துணைபுரிகின்றன.

தமிழின் மறுமலர்ச்சிக்கு மாநில அளவில் அனைத்துத்துறைகளிலும் பயன்படும் கருவியாய் தமிழ் மொழி அமைய முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற நூலாசிரியரின் கருத்து ஏற்கத்தக்கதே.

முழு கட்டுரையைப் படிக்க →