கீழாநிலைக் கோட்டைக் கிளிகள்
ஆண்களைவிட, பெண்களே இந்த நாவலில் சிறப்பாகச் சித்தரிக்கப்பட்டிருப்பதைக் காண முடிகிறது.
கீழாநிலைக் கோட்டைக் கிளிகள் - டாக்டர் தாமரை ஹரிபாபு; பக்.286; ரூ.300; மணிமேகலைப் பிரசுரம், சென்னை 600017. ✆ 9176451934.
கி.பி.1543-1583-இல் 84 ஊர் வல்லம்பர் நாடு பாண்டிய நாட்டின் கூற்றங்களில் ஒன்றாகத் திகழ்ந்த பொற்காலத்து நிகழ்வுகளைச் சிறப்பாக சித்தரிக்கிறது இந்த நாவல். ஒரு சரித்திர ஆவணம் போல் தொடங்குவது புதுமை. அடுத்த ஆண்டு அதே விசாகத் திருநாள் அன்று முன்பு பேசி முடிவு செய்தது போலவே கீழாநிலைக் கோட்டையில் கதாபாத்திரங்கள் அனைவரும் ஒன்று கூடி மகிழ்வதும் சிறப்பாக அமைந்துள்ளது.
அக்காலத்தில் புலம் பெயர்ந்து வந்த நகரத்தார் சமுதாயத்துக்கும் வல்லம்பர் சமுதாயத்துக்கும் இடையே வளர்ந்தோங்கிய நட்பையும் ஒற்றுமையையும் சிறப்பாகக் கையாண்டிருப்பது நாவலாசிரியரின் சமுதாய நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது.
பாம்பாற்று நாட்டைச் சேர்ந்த வல்லம்பர் தலைவரின் மகள் வள்ளி மயில், சாத்தப்பச் செட்டியாரின் மூத்த மகள் கண்ணம்மா, சிற்பியின் மகள் சுபத்ரா, கோவில் அர்ச்சகரின் மகள் திரிபுரசுந்தரி என்ற நான்கு இளம் பெண்களுமே, நாவலின் நாயகியராக விளங்குகின்றார்கள், இவர்கள் ஒவ்வொருவருமே, இசை, நடனம், வாட்போர் முதலிய கலைகளில் சிறந்து விளங்குவதோடு, இளவரசர்களின் உயிரையே காப்பாற்றும் அளவுக்கு வீரமும் துணிவும், சூழ்ச்சித் திறமும் மதிநுட்பமும் நிறைந்தவர்களாய் செயல்படுவது குறிப்பிடத்தக்கது. பொதுவாக ஆண்களைவிட, பெண்களே இந்த நாவலில் சிறப்பாகச் சித்தரிக்கப்பட்டிருப்பதைக் காண முடிகிறது.
இந்த நாவலில், சைவத்துக்குப் போட்டியாகத் தலைதூக்கிய சமணம், பௌத்தம் பற்றி விவாதங்களும், திருவள்ளுவர் சமணரா என்ற விவாதமும், பொருத்தமான இடங்களில் கையாளப்பட்டுள்ளன. நாவலில் இடம்பெறும் மாந்தர்களைப் போன்று வெண்மணி என்னும் நாயின் பாசமும் தியாகமும், ரவி என்னும் குதிரையின் வீரமும், கண்ணம்மாவைக் காப்பாற்றும் குரங்கின் நன்றியுணர்வும் நம் நெஞ்சில் அழுத்தமாகப் பதிகின்றன.