மொழியியல் - டாக்டர் பொற்கோ; பக்.244; ரூ.250; பூம்பொழில் வெளியீடு, சென்னை 600131. ✆ 9941237611
மொழி என்பது ஒருவருக்கொருவர் கருத்தைப் பரிமாறிக் கொள்வதற்கானது மட்டுமல்ல; உணர்ச்சியின் வெளிப்பாட்டுக்கும், உணர்வின் பரிமாற்றத்துக்கும் உதவும் அற்புதக் கருவியாகும். அந்த மொழியை அறிவியல் முறைப்படி ஆராய்ந்து, தெளிவை ஏற்படுத்துவதே மொழியியலின் பணி.
மொழியின் ஒலி - எழுத்து வடிவங்கள், சொற்பொருள், சூழல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விரிவாக பகுப்பாய்வு செய்வதும், அவற்றின் உண்மை நிலையைத் தொடர்ந்து ஆராய்வதும் மொழியியல் நடைமுறையாக உள்ளது.
அத்தகைய மொழியியலில் தலைசிறந்த அறிஞரும் தமிழியல் ஆராய்ச்சியாளருமான பேராசிரியர் பொற்கோ, 'ஆய்வுப் பேரவை' என்ற அமைப்பு நடத்திய நிகழ்ச்சியில் பங்கேற்று நிகழ்த்திய சொற்பொழிவுகளின் நூல் வடிவம் இது.
'மொழியும் இலக்கியமும்', 'மொழியியலும் இலக்கணமும்', 'தமிழ் ஒலியனியல்', 'தமிழ் உருபனியல்', 'தமிழ் தொடரியல்', 'மொழியும் வழக்குகளும்', 'செயற்படுத்த மொழியியல்', 'மொழியியலும் மொழி வளர்ச்சியும்' உள்ளிட்ட பயன்மிகு பத்து தலைப்புகளிலான உரைகள் இடம்பெற்றுள்ளன.
நூலாசிரியரின் ஆழ்ந்த மொழியறிவுடன் கடின உழைப்பும், மொழிக்கான அர்ப்பணிப்பும், தேடலும் வியப்படையச் செய்கிறது.
தெளிந்த கருத்துச் செறிவு, எளிய நடை, வாசகர் கவனம் சிதறாமல், கருத்தூன்றிப் பின்பற்றும் கட்டுக்கோப்பான அமைப்பு இவை நூலின் சிறப்பு.
தமிழ் ஆர்வலர்களுக்கும், தமிழைப் பிழையின்றி எழுத நினைப்போருக்கும் ஏற்ற நூல். தமிழ் குறித்த மொழியியல் ஆய்வு மேற்கொள்வோருக்கு சிறந்ததொரு வழிகாட்டி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.