அதுவும் இதுவும் - ஒரு பழைமைவாதியின் வாழ்வியல் சிந்தனைகள்; செல்லூர் கண்ணன்; பக். 248; ரூ.250; அருணா பப்ளிகேஷன்ஸ், சென்னை-49. ✆ 044- 26507131
நம் முன்னோர்கள் ஒன்றும் மூடர்கள் அல்லர்; அவர்கள் மேலானவர்கள் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறது இந்த நூல். வளர்ச்சி என்பது தவிர்க்க முடியாததுதான். ஆனாலும் அந்த வளர்ச்சி நம் முன்னோர்கள் கட்டிவைத்த அடித்தளத்தில்தான் அமைய வேண்டும் என்று உறுதிபட பல தலைப்புகளில் கூறுகிறார் நூலாசிரியர்.
அன்பே அறம்; அன்பே அழகு; பிறப்பு என்பதே ஆசையின் விளைவே என்பன போன்ற தத்துவார்த்த கருத்துகளை பாரதி, கண்ணதாசன் உள்ளிட்ட தமிழாளுமைகளின் கருத்துகளின் பலம் கொண்டு கட்டுரைகளைத் தொகுத்திருக்கிறார்.
தற்போதைய திரைப்படங்களின் சோகக் காட்சிகளில் செனாய் கருவி ஒலிப்பதை வருத்தத்துடன் பதிவு செய்கிறார். அது தமிழர் இசை அல்ல என்றும், தமிழர் இசைக் கருவிகளின் பயன்பாடு குறைந்து வருவதை நம் தமிழிசையின் வீழ்ச்சி என்றும் கூறுகிறார்.
ஆன்மிகத்தையும், உலக அரசியலையும் பிரிக்க முடியாது என்று கூறும் நூலாசிரியர், ஆதி மனிதனுக்கு இறை நம்பிக்கை தோன்றியதன் காரணம் என்ன? அதில் இறை நம்பிக்கை இல்லாதவர்கள் ஏன் உருவானார்கள்? அவர்களின் பயமற்ற தன்மை அவர்களை எப்படித் தலைவர்களாக்கியது என்பதைக் கூறி, தற்போதைய உலக அரசியலில் மதம் எத்துணை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்பட்டு, மதத் தலைவர்கள் எப்படி ஆட்சியாளர்களுக்கும் மேலாக உள்ளார்கள் என்று கூறும் கருத்து நிச்சயம் வாசகனைச் சிந்திக்க வைக்கும்.
எத்தனை தொழில்கள் வந்தாலும் விவசாயத்துக்கே முக்கியத்துவம், சக மனிதருடன் வாழும் முறை, கல்வியின் பங்கு, ஆன்மிகத்தின் உச்சமான உள்ளுணர்வு, ஜாதியப் பாகுபாட்டில் ஒüவையின் தெளிவு என்று எல்லாத் தளங்களிலும் பழைமையின் செழுமையையும், புதுமையின் தேவைகளையும் தெளிவாகக் கூறியுள்ளார் நூலாசிரியர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.