முகப்பு
நூல் அரங்கம்

அவள் இவள் உவள்

இத்தொகுப்பில் இடம் பெற்றிருக்கும் கதைகள் பெண்களின் பிரச்னைகளைச் சித்தரிக்கின்றன.

Updated On : 9 செப்டம்பர், 2025 at 5:15 AM
பகிர்:

அவள் இவள் உவள் - மீரா, கோமதி, நாகஜோதி, காளி; பக்.192; ரூ.250; ஹெர் ஸ்டோரிஸ், சென்னை-83; ✆75500 98666.

கரோனா காலம் படைப்புக் காலம். பலரை எழுத வைத்திருக்கிறது. அக்காலத்தில் குழுவாக இருந்து செயல்பட்ட மீரா, கோமதி, நாகஜோதி, காளி ஆகியோர் 'முச்சந்துமன்றம்' அமைப்பின் மூலம் இணைந்து கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர். அதன் பரிணாமம்தான் இந்த சிறுகதைத் தொகுப்பு.

பெண்ணைக் கட்டுப்படுத்துவது எது? அதிலிருந்து வெளியே வர உந்துதல் அளிப்பது, அந்தத் தடைகளை, கட்டுப்பாடுகளை தகர்ப்பதற்கான ஆயுதங்களை அடையாளப்படுத்துவது ஆகியவையே இந்த நான்கு படைப்பாளிகளின் நோக்கமாக இருக்கிறது.

'மண்குதிரை' சிறுகதையில் கமலம் வாழ்வில் யாருமே இல்லை. அவளுக்கு எல்லாமே கோவிந்தசாமிதான். அவர் திடீரென இறந்துபோக நிர்க்கதியாகிறாள். ஆணைச் சுற்றியே பெண்ணின் வாழ்க்கை.

டாக்டர் நாகஜோதியின் 'இடைவேளைக்குப் பிறகு' கதையில் வரும் அகிலாவுக்கு தனது விருப்பம் என்ன? என்ன பிடிக்கும் என்பது கூடத் தெரியாது. இதற்கு காரணமே, இப்படியெல்லாம் தெரிவிக்கும் உரிமை கூட அவளுக்கு இல்லை என்பதுதான்.

ஆணைச் சுற்றியே சிந்தனை-அவனது அதிகார எல்லையின்படி பெண்ணுக்கு மகிழ்ச்சிதரும் பிணைப்பு திருமணம் மட்டும்தான். அதிலும் பிசிறு தட்டும்போது வாழ்வில் ஏற்படும் நிச்சயமின்மை பெண்ணை முடக்கிப் போடுகிறது.

இதேபோன்று இத்தொகுப்பில் இடம் பெற்றிருக்கும் கதைகள் பெண்களின் பிரச்னைகளைச் சித்தரிக்கின்றன. சிந்திக்கத் தூண்டுகின்றன.

முழு கட்டுரையைப் படிக்க →