SWAMINATHAN
நூல் அரங்கம்

விசில்

ஆங்காங்கே ஷேக்ஸ்பியர் நாடகத்தில் வரும் ஆங்கில வசனங்களை குறியீடு செய்திருப்பது சுயகதைக்கு பலம் சேர்க்கிறது.

தினமணி செய்திச் சேவை

விசில்-நிவேதிதா லூயிஸ்; பக்.350; ரூ.274; ஹெர் ஸ்டோரிஸ், சென்னை- 600 083, ✆ 96003 98660.

ஆசையாக வாங்கி வந்த 'பிளாக்கி', பூனையிடம் காவு போவதில் தொடங்குகிறது 'இவளின்' கதை. சமுதாயத்தின் சான்றிதழ்களை மட்டுமே அங்கீகரிக்கும் ஒரு ஆசிரியையால், கறாராக வளர்க்கப்பட்டு, சிறிய பாராட்டும், அங்கீகாரமும் வீட்டில் கிடைக்க ஏங்கி நிற்கிறாள் 'இவள்'. பின்னர், அதே சமுதாயத்தை தனது அறிவால் எடைபோட்டுத் தூக்கிவீசி கம்பீரமாக நிமிர்ந்து நிற்கும் 'இவளின்' கதை இது.

சிறுமியாக இருந்தபோது, எல்லோரும் பேருந்து ஓட்டி விளையாடிய போது இவள் மட்டும் ரயில் ஓட்டி விளையாடினாள். அந்த ரயிலே தன்னுடன் பணியாற்ற 'இவளை' இணைத்துக் கொள்கிறது. அன்று ரயில்வேயில் தொடங்கி, இன்று எழுத்துலகில் பிரவேசித்திருப்பது வரையிலான பயணம்தான் இந்நூல்.

எண்ணங்களின் மேல்கொண்ட காதலால், மொத்தமுள்ள 17 அத்தியாயங்களுக்கும் எழுத்தால் இல்லாமல் எண்களால் தலைப்புகள். அந்த எண்களுக்கான விடை அந்தந்த அத்தியாயங்களில் பதிவிடப்பட்டிருப்பது சுவாரஸ்யம். ஆங்காங்கே ஷேக்ஸ்பியர் நாடகத்தில் வரும் ஆங்கில வசனங்களை குறியீடு செய்திருப்பது சுயகதைக்கு பலம் சேர்க்கிறது.

தன்னுணர்வுடன் தவிர்க்க முடியாமல் துளிர்த்து நிற்கும் வட்டார வழக்கில் திருநெல்வேலி தென்படுகிறது. தீவிர தேடலில் இருக்கும் ஒரு பெண் சமுதாயத்தில், ஆண்-பெண் பாகுபாடில்லாமல் பழகி, துணிச்சலுடன் விமர்சனங்களை எதிர்கொண்டு, நேர்மையுடன் இருந்தாலே போதும். அந்தப் பெண் தனக்கான வாழ்வை நிறைவுடன் வாழ்வாள் என்பதை இந்நூல் நமக்கு எடுத்துரைக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நிலம், நீர், நிழல்: தமிழ் இலக்கியங்களில் சூழலியல்

சட்டப்படி வீட்டில் எத்தனை கிலோ தங்கம் வைத்திருக்கலாம்?

ராஜஸ்தானில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டிய வெளிநாட்டவர்! வெளியேறுமாறு நோட்டீஸ்!

மேலை மெய்யியலுக்கு வழிகாட்டிய வள்ளுவம்

தொல்லியலும் வரலாற்றுச் சான்றுகளும்

SCROLL FOR NEXT