முகப்பு
நூல் அரங்கம்

தமிழகத் தொல்லியல் வரலாறு

தமிழக வரலாற்றை ஆதாரப் பூர்வமாக அறிய விரும்புவோர் கட்டாயம் படிக்க வேண்டிய நூல்.

Updated On : 9 செப்டம்பர், 2025 at 5:15 AM
பகிர்:

தமிழகத் தொல்லியல் வரலாறு: பொ.சங்கர்; பக்.176; ரூ.210; கிழக்கு பதிப்பகம் - சென்னை-14: ✆ 95000 45609.

இலக்கியங்கள் வாயிலாக தமிழகத்தின் வரலாறு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது எனக் கூறி வந்தாலும், அதற்கான தொல்லியல் சான்றுகள் நீண்ட காலமாக கிடைக்காமல் இருந்து வந்தது. இந்தியா சுதந்திரம் அடைந்த பின்பு தான் தமிழகத்தின் தொல்லியல் சான்றுகள் ஒவ்வொன்றாக வெளிவரத் தொடங்கின. தமிழக தொல்லியல் சான்றுகளை வெளிக்கொணரும் நோக்கில் தொல்லியல் ஆய்வுகளை தொகுத்து வெளியிட்டுள்ளார் நூலாசிரியர்.

தமிழகத்தின் வணிக நிலை, மக்களின் வாழ்க்கை முறை, மக்கள் பயன்படுத்திய கருவிகள் உள்பட சிந்துவெளி பண்பாட்டுக்கு நிகராகக் கருதப்படும் தமிழகத்தின் தொல்லியல் வரலாற்றை இந்நூல் விவரிக்கிறது.

நொய்யல் நதிக்கரையில் அமைந்துள்ள கொடுமணல் மூலம் பண்டையக் காலத்தில் உருக்குத் தொழில் மேலோங்கி இருந்ததையும், வணிகத்தில் சிறந்திருந்ததையும் அறிய முடிகிறது.

ஆற்றங்கரை நாகரிகங்களாக விளங்கும் கருவூர், மாங்குடி, பேரூர் மற்றும் கடற்கரையில் அமைந்த கொற்கை, அழகன்குளம், அரிக்கமேடு என 33 தொல்லியல் தளங்கள் மூலம் தமிழ் நிலத்தின் வரலாறு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இத்தகைய சிறப்பு வாய்ந்த தொல்லியல் தளங்கள் கண்டுபிடிக்கப்பட்ட விதம், இலக்கியச் சான்றுகள் என ஒருங்கிணைந்த பல தகவல்களைத் தெரிந்து கொள்ள முடிகிறது. தமிழக வரலாற்றை ஆதாரப் பூர்வமாக அறிய விரும்புவோர் கட்டாயம் படிக்க வேண்டிய நூல்.

முழு கட்டுரையைப் படிக்க →