நவமணி (மூலமும் உரையும்)
காஞ்சி மகா பெரியவரின் அன்பர்களுக்கு பக்தியுடன் தமிழ் விருந்தாக அமையும்.
நவமணி (மூலமும் உரையும்) -தொகுப்பாசிரியர்: இரா.இராதாகிருஷ்ணன்; பக்.488; ரூ.475; வானதி பதிப்பகம், சென்னை; ✆ 044 - 2434 2810.
மகா பெரியவர் என்று போற்றப்படும் காஞ்சி காமகோடி பீடாதிபதி சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் வேதங்கள் தழைக்கவும், தமிழ் மறை ஓங்கவும், கிராமங்கள்தோறும் ஒலிக்கவும் அயராது பணியாற்றி அன்பையும் இறை நம்பிக்கையையும் கோடானு கோடி மக்களிடம் பரப்பினார். அவரது எண்பதாவது ஆண்டு நிறைவு விழாவை ஒட்டி காஞ்சி மடத்தின் பக்தரான தமிழ்ப் பேராசிரியர் இராதாகிருஷ்ணன் இந்நூலை தொகுத்திருக்கிறார்.
கி.வா.ஜகந்நாதன் உள்ளிட்ட ஒன்பது புலவர் பெருமக்கள், காஞ்சி மகா பெரியவர் மீது தமிழ் இலக்கண மரபு வழி எழுதிய நவமணி என்னும் ஒன்பது காவியங்களின் தொகுப்பை 1977-ஆம் ஆண்டு வெளியிட்டு சமர்ப்பணம் செய்தார். அந்த நூலுக்கு தற்போது உரை எழுதப்பட்டு, மூலமும் உரையும் தொகுத்து வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்க் கவிதை மரபு இன்றும் நடைமுறையில் உள்ளது, படைப்போர் உள்ளனர் என்பதற்கு இந்நூல் சிறந்த சான்றாகும். பிரபந்தங்கள் 96 வகை என்பர். அவற்றில் ஒன்பது வகைகள் இந்த நூலில் கையாளப்பட்டுள்ளன.
தமிழ் மணமும் கவிதை வளமும் குன்றாமல், பிள்ளைத்தமிழ், நான்மணி மாலை, வெண்பா அந்தாதி, தூது, உலா, திருமடல், கலம்பகம் உள்ளிட்ட வகைகளில் காஞ்சி மகா பெரியவர் மீது பக்தி காவியங்கள் படைக்கப்பட்டுள்ளன.
பக்திச் சுவை ததும்பும் ஒன்பது பிரபந்தங்கள் அவற்றை இயற்றிய அண்மைக்கால இறையன்பர்களான புலவர்களின் கவி மேன்மையைக் காட்டுவதோடு, உரை தொகுப்பாசிரியரின் ஆன்மிக ஈடுபாட்டையும் இந்நூல் வெளிக்கொணர்கிறது.
தற்கால நூல் வெளியீட்டில் இது ஓர் அரிய முயற்சியாகும். காஞ்சி மகா பெரியவரின் அன்பர்களுக்கு பக்தியுடன் தமிழ் விருந்தாக அமையும்.