பண்டம்
இந்த இரு குறுநாவல்களும் 'எது வந்தாலும் வாழ்க்கையை எதிர்கொள்ளத் துணிந்துவிட வேண்டும்' என்பதையே வலியுறுத்துகின்றன.
பண்டம் - ம.காமுத்துரை; பக். 92; ரூ.130; டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ், கே.கே. நகர் மேற்கு, சென்னை-78; ✆ 99404 46650.
'பண்டம்', 'தோழர்' என்ற இரு குறு நாவல்களின் தொகுப்பு இந்நூல். இந்த இரு குறுநாவல்களும் குடும்பப் பொறுப்பைக் கையில் எடுக்கும் நிலையில் இருக்கும் இளைஞர்களைப் பற்றி பேசுகிறது. இந்த சமூகத்தில் ஒரு குறிப்பிட்ட வயதை எட்டியவுடன் குடும்பப் பொறுப்பை எடுத்துக் கொள்ள வேண்டியது இளைஞர்களின் எழுதப்படாத கடமையாக உள்ளது. அவ்வாறு குடும்பப் பொறுப்பை சுமக்கும்போது கிடைக்கிற பல அனுபவங்கள் அவர்களுக்கு வாழ்க்கையைக் கற்றுக் கொடுக்கின்றன.
'பண்டம்' குறு நாவலில் வரும் துரை, ஸ்பின்னிங் மில் தொழிலாளியாக இருந்து அங்கு நடைபெற்ற கூலி உயர்வுப் போராட்டத்தில் கொடி பிடித்து, கோஷமிட்டு அதனால் வேலை இழந்தவன். பின்னர், குடும்ப பாரத்தைச் சுமக்க கொடைக்கானலுக்கு துணி ஆர்டர் பிடிக்கும் வேலைக்குச் செல்கிறான். அதில் அவனால் சோபிக்க முடியவில்லை. ஏமாற்றத்தால் அலைக்கழிகிறான். என்றாலும், அதேவேளையில் சக மனிதர்களே நம்பிக்கையை ஏற்படுத்துகிறார்கள். இதுதான் கதையின் முக்கியமான இடமாகக் கருத வேண்டியுள்ளது.
'தோழர்' குறுநாவலில் வரும் குமார், மாவுக் கடையில் வேலை செய்பவன். தோழர்கள் சங்கம் அமைக்கும் போராட்டம் ஒன்றில் எதேச்சையாக கைதாகிறான். அதுதான் தோழர்களுக்கும் அவனுக்குமான உறவு. நெருக்கடியான சூழல்களில் தோழர்கள் குமாருக்கு உதவுவதும், குமாரின் மன ஓட்டமும்தான் இந்த குறு நாவல்.
இந்த இரு குறுநாவல்களும் 'எது வந்தாலும் வாழ்க்கையை எதிர்கொள்ளத் துணிந்துவிட வேண்டும்' என்பதையே வலியுறுத்துகின்றன. எல்லா வகையிலும் அழுத்தம் தரும் இந்த வாழ்வில் உழைக்கும் மக்களுக்கு இந்தக் குணம் மிக முக்கியம் என்று தோன்றுகிறது.