ஹிதேரா
ஹாலிவுட் கதைகளைப்போல அறிவியல் புனைவுகளை அதிகம் விரும்புபவர்களுக்கு இந்நாவல் மிகச்சிறந்த அனுபவத்தைக் கொடுக்கும்.
ஹிதேரா - மாயா; பக்.254; ரூ.350; ஹெர் ஸ்டோரிஸ், சென்னை - 83; ✆ 96003 98660.
மனித இனத்தின் ஆகச் சிறந்த பலத்துக்கும், பலவீனத்துக்கும் இடையிலான போராட்டத்தை 30 அத்தியாயங்களில் விளக்குகிறது இந்நாவல். மத நம்பிக்கைகளும் அறிவியல் கண்டுபிடிப்புகளும் சந்தித்துக்கொள்ளும் புள்ளியில் இந்த அறிவியல் புனைவு முழுமை பெறுகிறது. இயற்கை சீற்றத்தால் மனித இனம் அழிந்த பிறகு, எஞ்சியவர்கள் ஹிதேரா என்ற நாட்டை உருவாக்குகின்றனர்.
பக்தி, மாயை என்ற நம்பிக்கையில் மக்களை ஏமாற்றி, அறிவியல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஆட்சி நடக்கிறது. இதன் கடவுள், ஆட்சியாளர்கள், நிர்வாகிகள் என அனைவருமே செய்யறிவு ரோபோக்கள். மக்கள் சக்தியிடமிருந்து பலன் பெற நினைக்கும் குழு இவற்றை இயக்குகிறது. இக்குழுவின் துரோகத்தால் வஞ்சிக்கப்பட்ட பெண் ஒருத்தியின் மூலம் அந்த நாடு அறிந்துகொள்கிறது. அமானுஷ்யம் என மக்கள் நம்பும் அனைத்துமே அறிவியல்தான் என்பதை விறுவிறுப்புடனும், நம்பும் வகையிலும் விவரித்துள்ளார் நூலாசிரியர்.
எதிர்காலத்தில் மதம் என்ற ஒன்று எதுவாயிருக்கும்? கடவுள் பெயரில் நடக்கும் மோசடிகள், பாகுபாடுகள் எப்படிப்பட்டவை? செய்யறிவு மனித சக்திக்கு ஆபத்தாக மாறுமா? என்ற கேள்விகளுக்கான பதில்களை இந்நூலை வாசித்தால் அறிந்துகொள்ளலாம்.
அறிவியலில் எவ்வளவு வளர்ச்சி அடைந்தாலும் ஆண்கள் உலகில் பெண்களின் நிலை என்னவாக இருக்கும் என்பதையும் இந்நூல் முழுக்க ஆங்காங்கே விவரிக்கப்பட்டுள்ளன.
இந்நாவல் எதிர்காலத்தில் நடக்கும் கதை என்றாலும், அதிலும் ஆட்சி, அதிகாரம் முக்கிய பங்காற்றுகிறது.