கடன் என்ப நல்லவை எல்லாம்
'சங்க காலம் -மொழி நோக்கு' கட்டுரையில் மொழியியல் நோக்கில் சங்கப் பாடல்கள் ஆராயப்பட்டுள்ளன.
கடன் என்ப நல்லவை எல்லாம் - பொற்கோ; பக். 126; ரூ.100; பூம்பொழில் வெளியீடு, 16/10, ஆறாவது குறுக்குத் தெரு, சாஸ்திரி நகர், அடையாறு, சென்னை -20.
திருவள்ளுவர் என்ற பெயரில் தமிழ் வரலாற்றில் இன்னொரு புலவர் இருந்திருக்கிறார். அவர் 'ஞானவெட்டியான்' என்ற நூலை எழுதியிருக்கிறார் என்ற அரிய தகவலுடன் நூல் தொடங்குகிறது.
'நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளக்கும் மறைமொழி தானே மந்திர மென்ப' (தொல். செய். 171.) என்ற தொல்காப்பிய நூற்பாவை நினைவூட்டும் பாங்கில், 'நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து மறைமொழி காட்டி விடும்' (குறள்- 28) என்ற திருக்குறளைக் காண்கிறோம். மறைமொழிதான் மந்திரம் என்கிறார் தொல்காப்பியர். இந்த இரு செய்யுள் பகுதிகள், காலத்தால் தம்முள் நெருங்கியன போலுள்ளன.
சங்க இலக்கியங்கள் திருக்குறளை மேற்கோள் காட்டியிருக்கின்றன என்கிற நூலாசிரியர், அதன் காலத்தை கி.மு. முதல் அல்லது இரண்டாம் நுற்றாண்டு என்று தக்க சான்றுகளினூடாக நிறுவியுள்ளார்.
முதல் கட்டுரையான 'திருக்குறள் புதிய நோக்கில் ஒரு பொது அறிமுகம்' என்பதில் திருக்குறளின் காலம், இலக்கணமா? இலக்கியமா? திருக்குறள் தனித்தன்மைகள் என்ற பகுதியில் குறள்கள் வழியான விளக்கங்கள் ஆய்வாளர்களுக்கு புதுமைகளை அள்ளித் தரும்.
'சங்க காலம் -மொழி நோக்கு' கட்டுரையில் மொழியியல் நோக்கில் சங்கப் பாடல்கள் ஆராயப்பட்டுள்ளன. 'தமிழ்மொழி வரலாறு - இக்காலம்' கட்டுரையானது, அமைப்பாலும், பயன்பாட்டாலும் தமிழ்மொழி இக்காலச்சூழலுக்கு ஏற்ப எவ்வாறெல்லாம் வளர்ந்துள்ளது என்பதை விளக்கியுள்ளது.
இதேபோல் செந்தமிழ்த் தென்றல் சிலம்பொலிச் செம்மல், உலக மொழிகளும் தமிழும், நிலம் நீரைத் திரிக்கும் இனம் அறிவைத் திரிக்கும், அன்பு ஒன்றுதான் எல்லா வேறுபாடுகளையும் கரைக்கும், உலகத் தமிழ் இலக்கியம் ஆகிய கட்டுரைகளும் குறிப்பாக, தேவையான மொழிக் கொள்கை கட்டுரையானது மாநில மொழியே கல்வி மொழி, மொழித் திணிப்பு கூடாது என்பதை வலியுறுத்துகிறது.