முகப்பு
நூல் அரங்கம்

நகர்தல் என்றும் நன்று

நமக்கு ஏற்படும் பல்வேறு சிக்கல்களிலிருந்து மீள்வதற்கான தெளிவை ஏற்படுத்தும் நூல்.

Updated On : 9 செப்டம்பர், 2025 at 5:16 AM
பகிர்:

நகர்தல் என்றும் நன்று - பாரதி திலகர்; பக்.180; ரூ.270; ஹெர் ஸ்டோரிஸ், சென்னை-83; ✆ 96003 98660.

குடும்ப வாழ்க்கை, ஆண்-பெண் உறவு குறித்து காலங்காலமாக நம்மிடையே நிலவிவரும் பல கருத்துகள் இன்று வரை தொடர்கின்றன. பெண்ணைவிட ஆண் உயர்ந்தவன் என்ற கண்ணோட்டத்தில் நம் அன்றாட குடும்ப வாழ்க்கை இருக்கிறது. அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் உள்ள ஆண்-பெண் உறவை இழிவானதாக கருதும்போக்கு பலரிடம் உள்ளது. நமது பல கருத்துகள்எவ்வளவு அபத்தமானவை; உண்மையற்றவை; அறிவியல் பார்வை இல்லாதவை என்பதை போகிறபோக்கில் சொல்லிச் செல்கிறது இந்நூல்.

தமிழகத்தின் தென்கோடியில் கள்ளிகுளம் என்ற சிற்றூரில் பிறந்த நூலாசிரியர், தற்போது வாழ்ந்து கொண்டிருப்பது அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில். இரு வேறுபட்ட உலகங்களையும் நேரில் பார்த்து நூலாசிரியர் தெரிந்து கொண்ட உண்மைகள், நமது சிந்திக்கும் முறையை மாற்றியமைப்பதற்கான தேவையை நமக்கு உணர்த்துகின்றன.

குடும்பத்தில் பெற்றோரின் மனப்பான்மை, பிள்ளைகளின் செயல்கள், கணவன்-மனைவி இருவரிடையே எழும் பிரச்னைகள், காதல் திருமணம், பெற்றோர் பார்த்து வைத்த திருமணம் ஆகியவற்றில் தோன்றும் பல்வேறு சிக்கல்கள், மணமுறிவுகள் தோன்றுவதற்கான காரணங்கள் என பல்வேறு பிரச்னைகளுக்கான தீர்வுகளை இந்நூல் சொல்கிறது. முதியவர்கள் படும் துயரங்களையும், வேலைக்குப் போகும் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளையும் இந்நூல் பேசுகிறது. அவற்றிலிருந்து மீள்வதற்கான தெளிவையும் இந்நூல் தருகிறது.

மக்களின் சிந்தனையில் பெருமளவு தாக்கத்தை திரைத் துறை ஏற்படுத்துகிறது. அது உருவாக்கும் மனோபாவங்கள் குடும்ப வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. திரைத் துறையினர் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டியதன் அவசியத்தை இந்நூல் வலியுறுத்துகிறது. நமக்கு ஏற்படும் பல்வேறு சிக்கல்களிலிருந்து மீள்வதற்கான தெளிவை ஏற்படுத்தும் நூல்.

முழு கட்டுரையைப் படிக்க →