முகப்பு
நூல் அரங்கம்

திருமுருகாற்றுப்படை விளக்கம்

இதைப் படித்த பிறகு திருமுருகாற்றுப் படையின் மூலத்தைப் படித்தால் ஒருவாறு விளங்கும் என்பதும் கி.வா.ஜ.வின் எண்ணமாகும்.

Updated On : 9 செப்டம்பர், 2025 at 5:16 AM
பகிர்:

திருமுருகாற்றுப்படை விளக்கம்-கி.வா.ஜகந்நாதன்; பக்.448;விலை ரூ.340; அல்லயன்ஸ், சென்னை-4; ✆ 044-2464 1314.

திருமுருகாற்றுப்படை சைவத் திருமுறைகளில் பதினோராவது திருமுறையில் உள்ள நூல்களில் ஒன்று. சங்ககால நூலாக இருப்பதால், இந்த நூலின் நடை எளிதில் யாருக்கும் புலனாவதில்லை. ஆனாலும் பக்தர்கள் பன்னெடுங்காலமாக இதைப் பாராயணம் செய்து வருகின்றனர்.

திருமுருகாற்றுப்படையின் விளக்கத்தை தொடர் சொற்பொழிவுகளாக ஆற்றி வந்தார் கி.வா.ஜகந்நாதன். அதில் சமயம் தொடர்பான பல கருத்துகளை இணைத்து விளக்கினார். பிறகு அந்த சொற்பொழிவுகளை அடியொற்றிய விளக்கவுரையைத் திருமுருக கிருபானந்த வாரியார் நடத்திய 'திருப்புகழ் அமிர்தம்' என்ற பத்திரிகையில் தொடர்ச்சியாக எழுதி வெளியிட்டு வந்தார். திருமுருகாற்றுப்படைக்குப் பின்னால் பத்து வெண்பாக்கள் பிற்காலத்தில் சேர்த்து எழுதி வைத்திருந்தார்கள். அதற்கும் விரிவுரை எழுதினார். அவற்றின் தொகுப்பே இந்நூல்.

இந்த விளக்கவுரையில் வழிகாட்டியில் இல்லாத பல்வேறு செய்திகளைக் காணலாம். முக்கியமாக சமயம் சம்பந்தமான கருத்துகளின் விளக்கங்கள் விரிவாக இந்த நூலில் உள்ளன. நச்சினார்க்கினியர் உரை, வேறு ஒரு பழைய உரை ஆகியவற்றில் உள்ள பகுதிகளை இடையிடையே காட்டியிருக்கிறார். ஓரளவு தமிழ் தெரிந்தவர்களும் இதைப் படித்து தெரிந்து கொள்ள வேண்டும் என்பதும், இதைப் படித்த பிறகு திருமுருகாற்றுப் படையின் மூலத்தைப் படித்தால் ஒருவாறு விளங்கும் என்பதும் கி.வா.ஜ.வின் எண்ணமாகும்.

முழு கட்டுரையைப் படிக்க →