முகப்பு
நூல் அரங்கம்

பிறமொழி இலக்கியங்கள் (பிறமொழிப் படைப்பாளிகளும், படைப்புகளும்) (பாகம்-1)

நூலில் உள்ளவை அனைத்துமே படிக்க படிக்க சுவையூட்டுகின்றன.

Updated On : 9 செப்டம்பர், 2025 at 5:16 AM
பகிர்:

பிறமொழி இலக்கியங்கள் (பிறமொழிப் படைப்பாளிகளும், படைப்புகளும்) (பாகம்-1) - ஜெயா வெங்கட்ராமன்; பக்.328; ரூ.350; மணிவாசகர் பதிப்பகம், சென்னை-21; ✆ 93805 30884.

லியோ டால்ஸ்டாய், ரவீந்திரநாத் தாகூர், எம்.டி.வாசுதேவன் நாயர், பீட்டர் ப்ரூட், எர்னஸ்ட் ஹெமிங்வே, தகழி சிவசங்கரபிள்ளை, குஷ்வந்த்சிங், வி.ஸ.காண்டேகர், வைக்கம் முகமது பஷீர், சத்யஜித்ரே, கார்க்கி, எஸ்.கே.பொற்றேகாட், ஜி.வி.ஐயர், கிரீஷ் கர்னாட், முன்ஷி பிரேம் சந்த் உள்ளிட்ட இலக்கிய உலகின் மிகச் சிறந்த 25 சாதனையாளர்களின் படைப்புகள் குறித்த விவரங்கள், அவற்றின் சிறப்பம்சங்கள் மிக அழகாக இந்நூலில் தொகுத்து வழங்கப்பட்டிருக்கின்றன.

படைப்புகளைக் குறித்து மட்டும் எழுதாமல், படைப்பாளர்களின் வாழ்க்கை குறித்தும் எழுதியிருப்பது சிறப்பு.

ஒரு நூற்றாண்டுக்கு முன்பு ஜாதியக் கொடுமை எப்படி இருந்தது என்பதை 1909-இல் எழுதப்பட்ட ரவீந்திரநாத் தாகூரின் 'கோரா' நாவலின்மூலம் தெரிந்துகொள்ள முடிகிறது. மனித நேயம் என்பது சரிநிகர் சமமாய் இருக்க வேண்டும் என்பதை மூல ஆசிரியர், மொழிபெயர்ப்பு ஆசிரியர், எடுத்தாளும் நூலாசிரியர் மூவருமே வலியுறுத்தியிருக்கிறார்கள்.

தஸ்லிமா நஸ்ரீன் எழுதிய லஜ்ஜா, குஷ்வந்த் சிங்கின் 'பாகிஸ்தான் போகும் ரயில்' ஆகிய இரண்டு நாவல்களும் மத பயங்கரவாதத்தை எடுத்துச் சொல்கின்றன என்று கூறும் நூலாசிரியர், அதன் கதையம்சத்தை விரிவாக எடுத்து வைத்திருக்கிறார். குஷ்வந்த் சிங்கின் கதாபாத்திரமான நெசவாளி முஸ்லிம் பெண் பாத்திரம் நூரன், கொலை, கொள்ளைகளைப் பின்னணியாகக் கொண்ட ரெளடி ஜக்கா ஆகிய இருவரின் வாழ்க்கை எவ்வாறு சோகத்தில் முடிகிறது என்றும் விவரிக்கிறார்.

'செம்மீன்' நாவலுக்கும் படத்துக்குமான விமர்சனம், சிட்னி ஷெல்டன் பலமுறை தற்கொலைக்கு முயன்று தோற்று பின்னர் மிகப் பெரிய நாவலாசிரியரானது என நூலில் உள்ளவை அனைத்துமே படிக்க படிக்க சுவையூட்டுகின்றன.

முழு கட்டுரையைப் படிக்க →