முகப்பு
நூல் அரங்கம்

பெயரற்றவர்களின் குரல்

வெளியே தெரியாமல் புதைந்தழிந்த அந்த அக்கிரமங்களுக்கான மெளன சாட்சியம் இந்நூல்.

Updated On : 9 செப்டம்பர், 2025 at 5:16 AM
பகிர்:

பெயரற்றவர்களின் குரல் - தொகுப்பும், பதிப்பும் - நிவேதிதா லூயிஸ்; பக்.368; ரூ.500; ஹெர் ஸ்டோரிஸ், சென்னை - 83; ✆ 96003 98660.

இதிகாசங்களில் தொடங்கி, சங்க காலத்தில் தொடர்ந்து, இப்போது வரை சமூகத்தில் வேரூன்றி நிலைத்திருப்பது பெண்களுக்கு எதிரான வன்கொடுமை மட்டும்தான்.

திரெளபதி, சீதை, கண்ணகி, நீலி போன்றவர்களெல்லாம் காப்பிய நாயகிகளாகவும், கடவுள்களாகவும் மாறிப் போயினர். ஆனால், அதை விட கொடுந்துயரில் அனுதினமும் போராடும் கோடிக்கணக்கான பெண்களின் அழுகை நமக்குக் கேட்பதே இல்லை. இந்த நூலில் சமூகத்தில் சாமானிய பெண்களுக்கு நேர்ந்த பாதகங்களை பெயரற்றவர்களின் குரலாக பதிவு செய்திருக்கிறார் நிவேதிதா லூயிஸ்.

புனைவுகளில் சொல்லப்பட்டதைக் காட்டிலும் பெரும் வலியை நிஜத்தில் சுமந்து கொண்டிருக்கும் 45-க்கும் மேற்பட்ட பெண்களின் கசப்பான வாழ்பனுவங்கள்தான் இந்நூல். அதை அவர்களே தங்களது வாக்குமூலமாகப் பதிவு செய்துள்ளனர்.

அதில் சில சம்பவங்கள், மனசாட்சியை மட்டுமல்ல... மனித ஆன்மாவையே உலுக்குகின்றன.

பிறந்து மூன்று ஆண்டுகளேயான ஒரு பெண் குழந்தையை ஒரு கயவன் பாலியல் கொடுமைக்கு உள்ளாக்குகிறான். இந்த அவமானத்தை துடைத்தெறிய குழந்தையை கொல்வதற்கு எத்தனிக்கிறது சமூகம். அதிலிருந்து மீண்டு, தீரா மன அழுத்தத்துக்கு நடுவே முன்னேறிய அந்தப் பெண்ணை அவளுக்கு நேர்ந்த பாலியல் கொடுமையை மீண்டும் மீண்டும் நினைவூட்டி ஏளனம் செய்கிறது அதே சமூகம். இது எத்தகைய வன்மம்?

இதுபோன்று நூலில் இடம்பெற்றுள்ள எத்தனையோ சம்பவங்கள், சமூகத்தின் சாயத்தை வெளுக்கச் செய்கின்றன. ரத்த உறவுகள், சொந்தங்கள், நண்பர்கள், அண்டை வீட்டார், ஆசிரியர் என்ற பெயர்களிலான முகமூடிகளை அணிந்து கொண்டு பெண்களுக்கு எதிராக எத்தனையோ வக்கிரமங்கள் நிகழ்த்தப்பட்டுள்ளன. வெளியே தெரியாமல் புதைந்தழிந்த அந்த அக்கிரமங்களுக்கான மெளன சாட்சியம் இந்நூல்.

முழு கட்டுரையைப் படிக்க →