SWAMINATHAN
நூல் அரங்கம்

வணக்கம் வாரணாசி

காசிக்கும் ராமேஸ்வரத்துக்குமான தொடர்பும் அழகாக விவரிக்கப்பட்டுள்ளது. ஆன்மிகத் தேடல் கொண்டவர்களுக்கு நல்ல நூல்.

தினமணி செய்திச் சேவை

வணக்கம் வாரணாசி-நல்லி குப்புசாமி செட்டியார்; பக்.98; ரூ.100; ப்ரைன் பேங்க்; சென்னை- 600 017, ✆ 98410 36446.

காசிக்கும் நூலாசிரியர் நல்லி குப்புசாமிக்கும் வர்த்தகத் தொடர்பு உண்டு. ஆண்டுக்கு இரண்டு, மூன்று தடவை 'பனாரஸ் சேலைகள்' வாங்குவதற்காக செல்வார். அப்போது, காசி விசுவநாதர் கோயிலுக்கு மாலை நேரங்களில் சென்று, அங்கு நடைபெறும் 'ஆரத்தி' நிகழ்ச்சியில், நகரத்தார் விடுதி மேலாளர்களுடன் கலந்துகொள்வார்.

இந்த நூலை எழுதுவதற்கு அவருக்கு ஆதாரமாக அமைந்தது 'காசி காண்டம்'. இந்நூலை எழுதியவர் பாரதியாரின் மைத்துனி மகள் கோமதி ராஜாங்கம்.

அந்த நூலை பாரதியாரின் மைத்துனர் மகன் சுந்தரிடம் பெற்று, அதில் உள்ள தகவல்கள் மட்டுமல்லாது, தானும் சேர்த்தவற்றுடன் இந்நூலை உருவாக்கி இருக்கிறார்.

'காலங்கள் தோறும் காசி', 'காசியின் சிறப்பு', 'இதிகாச காலத்து காசி', 'இதிகாசத்தில், இலக்கியத்தில் இடம்பெறும் கங்கை', 'காசி தேச சரித்திரம்', 'காசியில் ஒரு ஞான பீடம்', 'தமிழகமும் காசியும்', 'காசி நகரக் கோயில்கள்', 'காசியில் சுந்தர ஸ்வாமிகளும் பாரதியாரும்', 'இன்றைய காசி' உள்ளிட்ட 12 தலைப்புகளில் காசியின் தகவல்களை அற்புதமாகப் படைத்திருக்கிறார் நூலாசிரியர்.

காசி என்றால் சமயத் துறவியும், புலவருமான மகான் குமரகுருபரர் இல்லாமலா? காசி மடம் எழுப்ப ஒüரங்கசீப்பின் ஆட்சியில், காசியின் நவாப்பாக இருந்தவரிடம் மடம் கட்ட நிலம் கேட்கவும், நவாப் 'என் மொழியில் விண்ணப்பிக்க உங்களால் முடியவில்லையே' என்று கேட்கவும், குமரகுருபரர் சரஸ்வதி தேவியை வேண்டி 'சகலகலாவல்லி மாலை' பாடலைப் பாடி இயற்றியதும், மறுநாள் நவாபுடன் இந்துஸ்தானியில் உரையாடும் ஆற்றல் பெற்றதான சம்பவம் வியப்பளிக்கிறது.

காசிக்கும் ராமேஸ்வரத்துக்குமான தொடர்பும் அழகாக விவரிக்கப்பட்டுள்ளது. ஆன்மிகத் தேடல் கொண்டவர்களுக்கு நல்ல நூல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நவீன சீரியலின் முடிசூடா மன்னர் திருமுருகன்: வைரலாகும் விடியோ!

ஓடிடியில் ஆர்யன்: இந்த வார படங்கள்!

கூடைப்பந்து வீரர் உயிரிழப்புக்கு பாஜக அரசுதான் காரணம்: காங்கிரஸ் குற்றச்சாட்டு

பும்ரா செய்தது மட்டும் நியாயமா? தெ.ஆ. அணியின் கேப்டன் பவுமா கேள்வி!

அரசியலமைப்பின் மீது அக்கறை இருப்பதாக பாஜக-ஆர்எஸ்எஸ் பாசங்கு: கார்கே!

SCROLL FOR NEXT