கருப்புத் தங்கம் பெட்ரோலியம் தோற்றமும் உற்பத்தியும்- ஜெயராஜ் நல்லதம்பி; பக்.251; பக்.200; நிர்மலா பதிப்பகம், சென்னை-600 095.
39 ஆண்டுகள் பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலை, அதன் பாதுகாப்பு தொடர்பான துறைகளில் பணியாற்றி ஓய்வுபெற்ற நூலாசிரியர், தனது பணிக்கால அனுபவம், பயிற்சியை நூலாக்கியுள்ளார். ஆற்றலை அறிமுகப்படுத்துவதில் தொடங்கி, நவீன சுத்திகரிப்பு வரையிலான முழுமையான தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
ஒன்றைத் தொடர்ந்து அடுத்ததாக, ஒன்றோடு ஒன்று தொடர்புடையதாக 24 கட்டுரைகளும் உள்ளதால், தொடக்கத்திலிருந்து கடைசி வரை வாசித்தால் முழுவதையும் அறிந்து கொள்ளலாம்.
கச்சா எண்ணெய் கண்டறியப்பட்டதில் இருந்து இப்போதைய நவீனம் வரையில் 150 ஆண்டுகள் துறையில் உள்ள அனைத்து தகவல்களும் நிரம்பியுள்ளன.
பெட்ரோலிய ஆலைகளில் தொடர்பு மொழி என்பது ஆங்கிலம்தான் என்பதால், புதிதாகப் பணியில் சேர்பவர்கள் ஆங்கிலம் தெரியாமல் அவதிப்படுவர் என்பதால், தமிழுக்கு இணையான ஆங்கிலச் சொற்கள் அடங்கிய கலைக்களஞ்சியமும், பாதுகாப்பு குறித்த ஒரு பிரிவும் இந்த நூலில் இணைக்கப்பட்டுள்ளன.
பெட்ரோலிய பொருள்களைப் பாதுகாப்புடன் உற்பத்தி செய்யும் செயல்முறைகளை எளிமையாக விளக்குவதோடு, தேவையான விளக்கப் படங்கள் உரிய இடங்களில் சேர்க்கப்பட்டுள்ளது நூலுக்கு சிறப்பைச் சேர்க்கிறது.
பெட்ரோலிய துறையில் பணியாற்றுவோர், பெட்ரோலிய கல்வி பயிலும் மாணவர்கள், துறை சார்ந்து இயங்குபவர்களுக்கு இந்த நூல் பெரிய வரப்பிரசாதம். கல்வி நிலையங்கள், நூலகங்களில் அவசியம் இருக்க வேண்டிய நூல் இது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.