அம்மன் தரிசனம் தீபாவளி மலர் 2025- ஜெ.எஸ்.பத்மநாபன்; பக்.214; ரூ.200; சென்னை -600 017, ✆ 044-2434 1674.
அம்மன் தரிசனம் தீபாவளி மலர் வாசகர்களின் எதிர்பார்ப்புகளுக்கேற்ப ஆன்மிக மணத்துடன் உருவாகியுள்ளது.
இந்தியா என்றால் பாரதம், மன்னர்கள் ஆட்சிக் காலத்திலேயே அகண்டபாரதத்தின் மக்கள் ஆன்மிகத்தால் ஒரே நாடாக இணைக்கப்பட்டிருந்தனர் என்பதற்கான ஆதாரங்கள், கங்கை தீர்த்தத்துடன் வடமாநிலத்தினர் தென்னகம் வருவதும், காசிக்குச் செல்லும் தென்னகத்தினரும் பரஸ்பரம் மதிப்புக்குரியவர்களாக அந்தப் பகுதி மக்களால் வரவேற்கப்பட்ட விதம் தொன்றுதொட்டு இருந்துவரும் வழக்கம். ஆனால், இன்று அந்த நிலை இல்லை என்பதும், 'ஒற்றுமை நமது உடனடித் தேவை' என்ற கட்டுரை மூலம் தெளிவுபடுத்தப்படுகிறது.
காசியின் சிறப்பையும் அங்கு கங்கா ஸ்நானம், சிவனின் மகிமைகள் போன்ற தகவல்கள் பாதுகாத்து படிக்க வேண்டியதாகும். சகல செல்வங்களையும் தரும் மங்கள விசாலி, குரு மகிமை உள்ளிட்ட கட்டுரைகள் வியப்பூட்டும் தகவல்களைக் கொண்டுள்ளன.
இறைவனின் கடைக்கண்பார்வை கிடைத்தால் சகலமும் கிடைக்கும். அது எப்படி சாத்தியம், அதற்கான மந்திரங்கள் எவை என்ற தகவல்கள் படித்தறிய வேண்டியவை.
மொத்தத்தில் பல பயனுள்ள ஆன்மிகத் தகவல்களுடன் தீப ஒளி வீசுகிறது அம்மன் தரிசனம் தீபாவளி மலர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.