லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலர் 2025-கிரிஜா ராகவன்; பக்.192; ரூ.200; சென்னை-600 083, ✆ 98408 16281.
மலரின் சிறப்பாக காஞ்சி காமகோடி பீடாதிபதிகள் வண்ணப் படங்களுடன் தொடங்குகிறது. குலதெய்வம் என்பதை கருப்பொருளாகக் கொண்டு எட்டு கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. குலதெய்வ வழிபாடுதான் ஆன்மிகம் என்றும், எதற்காக குலதெய்வ வழிபாடு, எப்படி குலதெய்வ வழிபாட்டை நடத்த வேண்டும்- சாஸ்தாவும் ஐயனாரும் ஒன்று, வீரன்-வழிபாடு-தெலுங்கர்களின் குலதெய்வம் என்ற கட்டுரைகள் சிறப்பானவை.
குலதெய்வ வழிபாடு வந்தவிதம் குறித்து- இலக்கியத்தில் ஆய்வு மேற்கொண்டு ஈசநேசன் மகஸ்ரீ எழுதிய கட்டுரையைப் பாராட்டலாம். எங்கள் குலதெய்வம் ஐயப்பன்தான் என்கிற டாக்டர் பாஸ்கரன் கட்டுரை உணர்வுபூர்வமானது.
அதேபோன்று, அருள்புரியும் ஐயப்பன், ஸ்ரீராகவேந்தரர், காசி விசாலாட்சி, பழனி தண்டாயுதபாணி வண்ணப் படங்கள் வீட்டின் பூஜையறையில் இடம்பெறத் தக்கவை. கதைப் பிரியர்களுக்குக்கென திகட்டும் வகையில் 23 கதைகள் இடம்பெற்றுள்ளன. சிவசங்கரி, சுப்ரபாலன் தேவிபாலா, இரா.முருகன், திருப்பூர் கிருஷ்ணன் உள்ளிட்ட பிரபலங்களின் கதைகளும் இதில் அடங்கும். 'மனசு' கதையில் கருவும்-எழுத்து நடையும்-ஒரு சின்ன விஷயத்தை சிறுகதையாக்கும் சிவசங்கரியின் அற்புதம்-வளரும் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும்.
கபினி ஆற்றங்கரையில் அமைந்த நஞ்சன்கூடு கோயில் சிறப்புகளை எழுத்தாளர் லட்சுமி ரமணன் சிறப்பாக சொல்லி உள்ளார். சரஸ்வதி முகப்பு அட்டையும் அருள்பொழிகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.