வேதாகம நூல்களுக்கு ஓர் அறிமுகம்-ந.ஜான் ஜெயானந்தம்; பக்.510; மோரியா ஊழியங்கள், சென்னை 600 108. ✆ 99624 94010.
இன்றைய காலகட்டங்களில் வேத வாசிப்பு குறைந்து வரும் நிலையில், 'வேதாகம நூல்களுக்கு ஓர் அறிமுகம்' என்ற தலைப்பிலான இந்த நூலில் வேதத்தில் உள்ள தீர்க்கதரிசிகள், ராஜாக்கள், அவர்கள் வாழ்ந்த காலத்தின் வரைபடங்கள், இலக்கியப் புலமைகளை வெளிப்படுத்தும் வசனங்கள், அவற்றின் மொழிபெயர்ப்புகள், குறிப்புகள் என பலதரப்பட்ட விஷயங்கள் தெளிவாக கூறப்பட்டுள்ளன.
66 புத்தகங்களை உள்ளடக்கிய வேதாகமத்தை ஆழ்ந்து ஆராய்ந்து நேர்த்தியாக, முழுமையான நூலாக வெளிக்கொணரப்பட்டுள்ளது. பரிசுத்த வேதாகமத்தைப் பற்றிய அடிப்படை அறிமுகத் தகவல்கள், அதன் மேன்மைகள் போன்றவை விளக்கமாக தரப்பட்டுள்ளன. பழைய ஏற்பாட்டின் 39 நூல்களும், புதிய ஏற்பாட்டின் 27 நூல்களும் பகுத்தாய்வு செய்யப்பட்டு, அந்த நூல்களை அறிமுகம் செய்வதில் பொதுவான உத்தியை ஆசிரியர் கையாண்டிருக்கிறார். அந்த நூல்கள் எப்போது, யாரால் எழுதப்பட்டவை என்பன போன்றவை விவிலிய நூல்களின் பின்புலத்தை அறிந்து கொள்ள ஏதுவாக அமைந்துள்ளது.
பழைய ஏற்பாட்டையும், புதிய ஏற்பாட்டையும் ஓப்பீடு செய்து இரண்டிலும் நடுநாயகமாக விளங்குபவர் இயேசு கிறிஸ்துவே என விளக்கிக் காட்டப்பட்டுள்ளது. திருத்தூதர் பணிகள், அப்போஸ்தலரின் பணிகள் தெளிவாகவும், விளக்கமாகவும் கூறப்பட்டுள்ளது. விசுவாசிகளுக்கான பொதுவான போதனை நூல்கள் என்னும் தலைப்பில் யோக்கோப்பு, பேதுரு, யோவான், யூதா முதலியோரின் மடல்களும், அவற்றின் பின்புலம், காலம், அவை குறித்து அறிஞர்கள் என்ன கூறுகின்றனர் போன்ற கருத்துகளின் அடிப்படையில் விளக்கப்பட்டுள்ளன. கிறிஸ்தவ சமூகத்துக்கு ஒரு குறிப்பிடத்தக்க நூல்களில் ஒன்றாக இதுவும் திகழும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.