மண்டோதரி-(தெலுங்கிலிருந்து தமிழ்ச் சிறுகதைகள்)-தமிழில் கெளரி கிருபானந்தன்; பக்.144; ரூ.150; அருட்செல்வர் நா.மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம், பொள்ளாச்சி-642 003. ✆ 99761 44451.
நூலாசிரியர் கெளரி கிருபானந்தன் தெலுங்கு, தமிழ் என இரு மொழிகளிலும் மொழிபெயர்ப்புகளை 25 ஆண்டுகளாக செய்து வருகிறார். இந்த வகையில், இதுவரை 80 நூல்கள் வெளிவந்துள்ளன. இந்த நூலில் 15 தெலுங்கு கதைகள் தமிழ் வடிவம் பெற்றுள்ளன. எண்டமூரி வீரேந்திரநாத் மற்ற 16 எழுத்தாளர்களும் தெலுங்கில் பிரபலமான எழுத்தாளர்களே.
இந்த சிறுகதைகளில் 'உறவின் சுவடிகள்' (எங்கள் நைனா ட்ரிக் கற்றுக் கொள்ளாத கதை) 'சூப்பர் மாம் சின்ட்ரோம்' 'தீராத பிரச்னை' 'மண்டோதரி' ஆகிய கதைகளைக் குறிப்பிட்டுச் சொல்ல முடியும். வறுமை காரணமாக ஒரு பெண் விற்கப்பட்டு வேறொரு மாநிலத்தில் குடும்பமாக வாழ்ந்து தனது முதுமையான காலத்தில் தான் பிறந்த ஊருக்கு வந்து பார்க்க விரும்பும் கதை. இந்த அனுபவத்தை மிகையின்றி பிசுபாடி உமா மகேஸ்வர ராவ் சிறப்பாக எழுதியிருக்கிறார். நம்மிடையே நல்லவர்களும் இருக்கிறார்கள் என்பதற்கு உதாரணமாக கரீம் சாய்பு பாத்திரத்தைப் படைத்து 'எங்கள் நைனா ட்ரிக் கற்றுக் கொள்ளாத கதை' மூலம் சிறப்பான கதையை முகமது சுதிர் பாபு தந்திருக்கிறார்.
இந்நூலின் தலைப்பான 'மண்டோதரி' கதை வித்தியாசமானது. மண்டோதரி-சீதை வாக்குவாதம், ராவணன்-மண்டோதரி உரையாடல், விபீஷணன் - மண்டோதரி வாதம் முற்றிலும் வித்தியாசமான கோணம்.
ராவணன் சிதையை அணைத்து, மண்டோதரி வைணவிய கோலம் பூண வேண்டும். அப்போதுதான் விபீஷணன் பட்டாபிஷேகம் நடக்கும் என்கிறார் ஸ்ரீராமர். மண்டோதரியோ தான் விதவைக் கோலம் பூண மாட்டேன். ராவணன் சிதை அணையவே கூடாது. அண்ணன் ராவணனுக்கு
துரோகம் விளைவித்த நீ (விபீஷணன்) பட்டம் சூட்டிக் கொள் என்று கூறுவதன் மூலம் அவளை ஒரு புரட்சிப் பெண்ணாக கதாசிரியர் 'ஓல்கா' படைத்திருக்கிறார்.
வித்தியாசமான கதைகள் கொண்ட தொகுப்பு-சிறந்த மொழிபெயர்ப்பு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.