முகப்பு
நூல் அரங்கம்

டார்வின் (வாழ்வும் அறிவியலும்)

டார்வின் பிறந்த வரலாற்றுக் காலகட்டம், கொந்தளிப்பான அரசியல் சூழல் ஆகியவற்றின் பின்னணியில் டார்வின் தன் கோட்பாட்டை உருவாக்கிய வரலாறை இந்த நூல் விவரிக்கிறது.

Updated On : 7 ஏப்ரல் 2026, 3:08 pm IST
பகிர்:

டார்வின் (வாழ்வும் அறிவியலும்)-நன்மாறன் திருநாவுக்கரசு; பக். 296; ரூ. 350; கிழக்கு பதிப்பகம், சென்னை-600 014, ✆ 044-4200 9603.

இயற்கைத் தேர்வு என்றால் என்ன? குரங்கில் இருந்து மனிதன் பரிணமித்தானா? கடவுளை டார்வின் நிராகரித்தாரா? உள்ளிட்ட கேள்விகளுக்குப் பதிலளிப்பதோடு மட்டுமல்லாது, 'பரிணாம கோட்பாட்டின் தந்தை' என்று போற்றப்படும் சார்லஸ் டார்வினின் வாழ்க்கை வரலாறு; பரிணாம உயிரியலில் டார்வினின் பங்கு ஆகியவற்றையும் விரிவாக அறிமுகப்படுத்துகிறது இந்த நூல்.

உயிரினங்களை கடவுள் படைக்கவில்லை. அவை சில இயற்கை விதிகளின் கீழ் பரிணமித்து படிப்படியாகத் தோன்றின என்று டார்வின் கண்டறிந்தார். ஆனால், இதை வெளியுலகுக்கு அறிவிக்க 22 ஆண்டுகள் தேவைப்பட்டது. காரணம், அன்றைக்கு இருந்த மத ஆதிக்கம், கொந்தளிப்பான அரசியல் சூழல்.

Advertisement

Advertisement

தென் அமெரிக்கா, பசிபிக் பெருங்கடல், ஆஸ்திரேலியா, இந்தியப் பெருங்கடல், தென் ஆப்பிரிக்கா, அட்லாண்டிக் பெருங்கடல் உள்ளிட்ட பகுதிகளுக்கு டார்வின் மேற்கொண்ட கடற்பயணம் இயற்கை குறித்த அவரது அறிவை விசாலப்படுத்தியது. இந்தப் பயணத்தில் பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள கலபகோஸ் தீவுக்கூட்டம் டார்வினுக்கு இயற்கை அதிசயங்களை கண்முன் விரித்தது. இந்தப் பயணத்துக்குப் பிறகு, தனது கோட்பாட்டை நிறுவத் தேவையான அத்தனை ஆதாரங்களும் அவரிடம் இருந்தன.

டார்வின் மறைந்து நூறு ஆண்டுகள் கடந்த பின்பும் அவரது கருத்துகள் சமூகத்தில் மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

டார்வின் பிறந்த வரலாற்றுக் காலகட்டம், கொந்தளிப்பான அரசியல் சூழல் ஆகியவற்றின் பின்னணியில் டார்வின் தன் கோட்பாட்டை உருவாக்கிய வரலாறை இந்த நூல் விவரிக்கிறது.

ஓர் அறிவியலாளரின் வாழ்க்கை வரலாற்றை இவ்வளவு எளிமையாக இதற்கு முன்பு தமிழில் பதிவு செய்யப்படவில்லை என்பது இந்த நூலின் சிறப்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.