SWAMINATHAN
நூல் அரங்கம்

ஊர்க்காவலன் (பாகம்-2)

காவல் துறையில் உள்ளோர் படித்து பயன்பெற வேண்டிய நூல் இது.

தினமணி செய்திச் சேவை

ஊர்க்காவலன் (பாகம்-2) - துக்கையாண்டி ஐ.பி.எஸ்.; பக்.208; ரூ.250; மின்னம்பலம் பதிப்பகம், சென்னை-600 005, ✆ 93618 55184.

காவல் துறையில் துணைக் கண்காணிப்பாளராக பணியைத் தொடங்கி கூடுதல் இயக்குநர் வரை பதவி உயர்ந்து ஓய்வு பெற்ற அதிகாரி துக்கையாண்டியின் பணி அனுபவங்களின் இரண்டாம் தொகுப்பே இந்நூல்.

வட ஆற்காடு, தர்மபுரி மாவட்டங்களில் நக்சல் தீவிரவாதம் தலையெடுத்தபோது அதை ஒடுக்குவதில் வால்டர் தேவாரத்துக்கு வலது கரமாக செயல்பட்டது மட்டுமல்ல, பல நக்சல் தீவிரவாதிகளுக்கு நல்வழி காட்டி, காவல் துறையில் பணியமர்த்தவும் செய்தவர் துக்கையாண்டி.

இலங்கைத் தமிழர் பிரச்னையில் தமிழக அரசுக்கும் மத்திய அரசுக்கும் பக்கபலமாய்ச் செயல்பட்டு அப்போதைய முதல்வர் எம்ஜிஆர், ஆளுநர் பி.சி. அலெக்சாண்டர் ஆகியோரின் பாராட்டுகளை துக்கையாண்டி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்னாள் முதல்வர்களான கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் மீது பதியப்பட்ட வழக்குகளை விசாரணை செய்த அதிகாரி இவர்.

புலனாய்வுத் துறையில் சிக்கல்கள் நிறைந்த பல வழக்குகளைக் கையாண்டு மாநிலத்துக்குப் பெருமை சேர்த்துள்ளார்.

பாரபட்சம் காட்டாமலும், யாருக்கும் அச்சப்படாமலும் உண்மைகளை அறிவிக்கும் துக்கையாண்டியின் திறன்மிகு அனுபவங்களை இந்நூல் எடுத்துரைக்கிறது.

காவல் துறையில் உள்ளோர் படித்து பயன்பெற வேண்டிய நூல் இது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எப்ஸ்டீன் கோப்புகள்! ரஷிய பெண்ணுடன் உறவு; பில்கேட்ஸுக்கு பால்வினை நோய்?

விசில்

நிலம், நீர், நிழல்: தமிழ் இலக்கியங்களில் சூழலியல்

சட்டப்படி வீட்டில் எத்தனை கிலோ தங்கம் வைத்திருக்கலாம்?

ராஜஸ்தானில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டிய வெளிநாட்டவர்! வெளியேறுமாறு நோட்டீஸ்!

SCROLL FOR NEXT