முகப்பு
நூல் அரங்கம்

நித்திலன் வாக்குமூலம்

மிக எளிதாக எல்லோரும் இம்மூன்று நாவல்களிலும் பயணித்துவிட முடியாது. ஒரு சிறந்த வாசிப்பு அனுபவம் இருந்தால் மட்டுமே அது தரும் ஆச்சரியங்களை ரசிக்கவும், அனுபவத்தை உள்வாங்கவும் முடியும் என்பதே இந்நாவலின் சிறப்பு.

Updated On : 16 பிப்ரவரி, 2026 at 7:38 PM
பகிர்:
Updated On : 16 பிப்ரவரி, 2026 at 7:37 PM

நித்திலன் வாக்குமூலம் - கபிலன் வைரமுத்து; பக்.202; ரூ.300; டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ், கே.கே.நகர் மேற்கு, சென்னை - 600 078, ✆ 99404 46650.

கபிலன் வைரமுத்துவின் ஆகோள் என்ற அறிவியல் புதினத் தொடரில் ஆகோள், மாக்கியவெல்லி காப்பியம் வரிசையில் மூன்றாம் பாகமாகவும் நிறைவாகவும் நித்திலன் வாக்குமூலம் வெளிவந்துள்ளது. நித்திலனின் மரணம் குறித்து புலன் விசாரணையாக இந்நூல் வளர்வதோடு மட்டுமல்லாது, அதிகார மர்மங்களுக்கு அருகே சிறு வெளிச்சத்தைப் பாய்ச்ச முனைந்திருக்கிறது.

Updated On : 16 பிப்ரவரி, 2026 at 7:38 PM

அறிவியலைப் மையப்படுத்திய நவீன யுகம் அடுத்து என்னென்ன அதிசயம் அல்லது அழிவுகளை ஏற்படுத்தப் போகிறதோ என்று அவ்வப்போது சாமானியனின் மனதில் எழும் எண்ணங்களை அப்படியே காட்சிகளாக கண்முன் நிகழ்த்திக் காட்டுகிறது இந்நாவல்.

Advertisement

இந்நாவலைப் படித்து முடிக்கையில் ஏற்கெனவே வெளியான இரண்டு பாகங்களை வாசித்த அனுபவமும், கால ரயிலேறி முக்காலத்திலும் பயணித்த அனுபவமும் ஏற்படுகிறது.

அதுபோலவே அரசியல், வரலாறு, அறிவியல் மட்டுமல்லாது இதுவரை பயன்பாட்டில் இல்லாத நவீன தொழில்நுட்பத்தோடும் உரையாடும் அனுபவமும் ஏற்படுகிறது.

கடந்த கால வரலாறு, நிகழ்கால அரசியல், எதிர்காலத் தேவை ஆகியவற்றை மக்களின் சார்பில் பேசுவதால் இது ஏனைய சமகால சரித்திர நாவல்களில் இருந்து வேறுபட்டு தனிச்சிறப்பு மிக்க படைப்பாக மிளிர்கிறது.

மிக எளிதாக எல்லோரும் இம்மூன்று நாவல்களிலும் பயணித்துவிட முடியாது. ஒரு சிறந்த வாசிப்பு அனுபவம் இருந்தால் மட்டுமே அது தரும் ஆச்சரியங்களை ரசிக்கவும், அனுபவத்தை உள்வாங்கவும் முடியும் என்பதே இந்நாவலின் சிறப்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.