நூல் அரங்கம்

இலக்கியக் கொள்கைகள்

'போற்றிப் பாடல்களும் ஆற்றுப்படையும் ஒப்பீடு' என்ற தலைப்பிலான கட்டுரையில் 'ஆற்றுப்படை' மனித நல நோக்குடைய பாடல்கள் என்று கூறுவது மிகையான கூற்றாகாது என்று நூலாசிரியர் கூறுவது முற்றிலும் சரியானது.

தினமணி செய்திச் சேவை

இலக்கியக் கொள்கைகள்-முனைவர் ம.திருமலை; பக்.196; ரூ.200; மீனாட்சி புத்தக நிலையம், மதுரை - 625 001, ✆ 99421 76893.

நூலாசிரியர் பல்வேறு இதழ்களில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே 'இலக்கிய கொள்கைகள்' நூலாக வடிவம் பெற்றிக்கிறது. ஒப்பியல் கொள்கை, எடுத்துரைப்பியல் கொள்கை, ஆளுமை, வாசிப்பு மற்றும் இலக்கிய இயக்கக் கொள்கை என்ற பிரிவுகளின் கீழ் மொத்தம் 17 கட்டுரைகள் நூலில் இடம்பெற்றுள்ளன.

'போற்றிப் பாடல்களும் ஆற்றுப்படையும் ஒப்பீடு' என்ற தலைப்பிலான கட்டுரையில் 'ஆற்றுப்படை' மனித நல நோக்குடைய பாடல்கள் என்று கூறுவது மிகையான கூற்றாகாது என்று நூலாசிரியர் கூறுவது முற்றிலும் சரியானது.

நூலை வாசிப்பதில் வாசகனுக்கு முக்கியத்துவம் உண்டு என்பதை தொல்காப்பிய நூற்பா குறிப்பிடுவதை, வெளிநாட்டு அறிஞர்கள், விமர்சகர்களின் கருத்துகளுடன் ஒப்பிட்டு 'நோக்கும் வாசகர் எதிர்வினைக் கோட்பாடும்' என்ற கட்டுரையில் விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

முல்லைப்பாட்டில் எடுத்துரைப்பியல் என்பது கையாளப்பட்ட விதமும், பிற இலக்கியங்கள், நாவல்களில் அது சொல்லப்பட்ட முறையும் பல்வேறு சான்றுகளுடன் குறிப்பிடப்பட்டுள்ளன. மேலும் முல்லைப்பாட்டு, நெடுநல் வாடையின் கட்டமைப்பு குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

மதுரையில் கோவலன் கொலையுண்ட பிறகு நடைபெறும் நிகழ்ச்சிகளில் கண்ணகி மாறுபட்ட ஆளுமையுடையவளாகப் படைக்கப்பட்டிருப்பது 'செயலூக்க ஆளுமை' வகையைச் சார்ந்தது என்ற கருத்து உளவியல் நோக்கிலான ஆய்வாக அமைகிறது. நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் நீளமாக அமைந்திருந்தாலும், அவை வலியுறுத்தும் கருத்துகள் ஆழமாக சிந்திக்கத்தக்கவை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜமா இயக்குநரின் புதிய பட போஸ்டர்!

எதிர்க்கட்சியின் போராட்டத்தில் காயமடைந்த கேரள அமைச்சர் மருத்துவமனையில் அனுமதி!

பாரிஜாதம் தொடரின் புதிய நாயகன் அக்‌ஷய் கமல்!

நல்லகண்ணு மறைவு: குடியரசு துணைத் தலைவர் இரங்கல்!

அக்‌ஷர் படேல் பிளேயிங் லெவனில் இடம்பெற வேண்டும்: ரவி சாஸ்திரி

SCROLL FOR NEXT