தொல் வழிபாடுகளும் விந்தை சடங்குகளும்- முனைவர் பெ.பெரியார் மன்னன்; பக்.130; ரூ.200; விவேகா பதிப்பகம், வாழப்பாடி, சேலம் மாவட்டம்-636 115, ✆ 94432 73922.
தமிழ்நாட்டில் உள்ள கிராமங்களையும், கிராம மக்களையும் உலக அளவில் பல மதத்தினரும் வியந்து ரசிப்பதற்கு பாரம்பரியம், மொழி, பண்பாடு, கலாசாரத்தைக் கைவிடாமல், நம் முன்னோர் காட்டிய வழியில் மரபு மாறாமல் இன்றளவிலும் தொடர்வதே காரணம்.
சேலம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பல தலைமுறைகளைக் கடந்து, விந்தையான வழிபாட்டு முறைகளை உலகம் அறியும் வகையில் 52 கட்டுரைகளாகத் தொகுத்து 'வியப்பூட்டும் வழிபாடுகள்' எனும் நூலை 2021-இல் நூலாசிரியர் வெளியிட்டார்.
இதைத் தொடர்ந்து, மேலும் 38 வழிபாட்டு முறைகளைத் தொகுத்து இந்த நூலை எழுதியுள்ளார். பிறந்த வீட்டுக்கு விருந்துக்குச் செல்லும் அம்மன், பேய் விரட்டும், மழை வேண்டி விதவைகளுக்கு பாத பூஜை வழிபாடு, முந்நூறு ஆண்டுகளுக்கு முன்பு இறந்த ஆட்சியாளரான சன்னாசி கல்வெட்டுக்கு வழிபாடு, கண் ஓம்பலைத் தடுக்க கற்கீறல் ஓவிய வழிபாடு, தலையில் தேங்காய் உடைத்து வழிபாடு, முனியம்மனுக்கு நெகிழி நாற்காலி காணிக்கை, ஆஞ்சநேயரை விநாயகராகக் கருதி வழிபாடு, முனியம்மனுக்கு ஆண்கள் வழிபாடு, முன்னோர்களுக்கு சிலை வைத்து வழிபாடு, மழை வேண்டி அம்மனுக்கு பொங்கல் உருண்டை சோறும் மொச்சைக் கொட்டை குழம்பும் படைத்து வழிபாடு உள்ளிட்ட வழிபாடுகளைப் படிக்கும்போது வியப்பளிக்கிறது.
உலகில் எந்தப் பகுதிகளில் இருந்தாலும், விழாவின் போது அந்தந்த ஊர் மக்கள் தவறாது பங்கேற்கின்றனர் என்பது பாராட்டுக்குரியது.
தமிழர்களின் பெருமைகளைப் பறைசாற்றும் வகையில், தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் இதுபோன்ற விழாக்கள் குறித்த நூல்கள் மென்மேலும் வெளிவர இந்த நூல் உந்துதலாக இருக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.