முகப்பு
நூல் அரங்கம்

பழமொழி நானூற்றில் கருத்து வெளிப்பாடு

பழமொழி நானூற்றின் அமைப்பும் சிறப்பும், கருத்து வெளிப்பாட்டில் கற்பனையின் பாங்கு, கருத்து வெளிப்பாட்டில் அணியின் பாங்கு, கருத்து வெளிப்பாட்டில் பிற இலக்கிய கூறுகளில் பாங்கு ஆகிய தலைப்புகளில் இந்நூல் அமைந்துள்ளது.

Updated On : 2 மார்ச், 2026 at 12:39 PM
பகிர்:

பழமொழி நானூற்றில் கருத்து வெளிப்பாடு-ச.கிருத்திகா; பக்.224; ரூ.210; சித்ரா பதிப்பகம், சென்னை-600 024, ✆ 9444463214.

மக்களின் பேச்சு வழக்கில் புழக்கத்திலிருந்து ஏட்டுக்கு வந்து உழைக்கும் மக்களின் பாடுகளை சொல்பவை பழமொழிகள்.

தொல்காப்பியர் தமது பொருளதிகாரம் செய்யுளியல் 79-ஆம் நூற்பாவில், "பாட்டுரை நூலே வாய்மொழி பிசியே அங்கத முது சொலோடவ் வேழ் நிலத்து' எனக் கூறியுள்ளார்.

இதில் முதுசொல் என்பது பழமொழியைக் குறிக்கும்.

தொல்காப்பியம் வரையறுத்துள்ள இலக்கண வரம்புக்குள் "பழமொழி நானூறு' எப்படி அமைந்துள்ளது என்று தொடங்கி, அந்த நூல் கையெழுத்துப்படி முதல் அச்சுப்படி கண்டு, பல நிலைகளைத் தாண்டி இன்றைய பல்வேறு பதிப்புகள் வரை எட்டிய விதத்தை நூலாசிரியர் தொகுத்துள்ளார்.

404 பழமொழிகளை அகர வரிசைப்படுத்தியுள்ளார் நூலாசிரியர். இவற்றில் பெரும்பாலானவை இன்றும் வழக்கில் உள்ளன. உலக்கை மேல் காக்கை, நாய் பெற்ற தெங்கம்பழம், முள்ளினால் முள் களையுமாறு, நுணலும் தன் வாயால் கெடும், நாய்காணின் கல்காணாதவாறு, அறிதுயில் யாருக்கும் எழுப்பலரிது, இருதலைக் கொள்ளி போல, குலவிச்சை கல்லாமற் பாகம்படும் - உள்ளிட்ட இந்தப் பழமொழிகள் மக்களில் வாழ்வியல் சார்ந்தும், உயிரினங்கள் சார்ந்தும் உள்ளன.

பழமொழி நானூற்றின் அமைப்பும் சிறப்பும், கருத்து வெளிப்பாட்டில் கற்பனையின் பாங்கு, கருத்து வெளிப்பாட்டில் அணியின் பாங்கு, கருத்து வெளிப்பாட்டில் பிற இலக்கிய கூறுகளில் பாங்கு ஆகிய தலைப்புகளில் இந்நூல் அமைந்துள்ளது.

பழமொழிகளின் அகர வரிசை, கற்பனை மற்றும் அணி வகைகள், பழமொழி நானூற்றில் இடம் பெற்றுள்ள உவம உருபுகள், பழமொழிகளை விளக்க எடுத்துக்கொண்ட கருப்பொருள்கள், ஆடுஉ முன்னிலை, மகடுஉ முன்னிலை, உவமை அணியும் உறுப்புகளும், வழக்கு மொழியில் சில பழமொழிகள் என அமைத்து சிறப்பான நூலாக உள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →