குட்டி குடித்தல் குழுந்தலாயி அம்மன் வரலாறு
திருச்சியில் உள்ள ஓலைப்பிடாரி அம்மன், இதர அம்மன் கோயில் திருவிழாக்கள், கருப்பண்ண சுவாமி குறித்த வரலாற்றை அருமையாக விளக்கியுள்ளார்.
நூல் அரங்கம்குட்டி குடித்தல் குழுந்தலாயி அம்மன் வரலாறு
திருச்சியில் உள்ள ஓலைப்பிடாரி அம்மன், இதர அம்மன் கோயில் திருவிழாக்கள், கருப்பண்ண சுவாமி குறித்த வரலாற்றை அருமையாக விளக்கியுள்ளார்.
குட்டி குடித்தல் குழுந்தலாயி அம்மன் வரலாறு- ஹரிஷ் பிரபாகரன்; பக்.108; ரூ.200; எம்.ஜெ. பப்ளிகேஷன் ஹவுஸ், திருச்சி-1; ✆ 97907 06548.
குலதெய்வம், வீட்டுக் கன்னி தெய்வம், காவல் தெய்வம், எல்லை தெய்வம், இன தெய்வம் உள்ளிட்ட பல தெய்வங்கள் உள்ளன. இவற்றைப் பற்றியும், குலதெய்வ வழிபாட்டின் முக்கியத்துவம் குறித்ததொரு புரிதல் இப்போது மக்களிடையே வந்துள்ள நிலையில், நூலாசிரியர் தனது சொந்த ஊரின் எல்லைக்காவல் தெய்வமான செங்குளத்தான் குழுந்தலாயி அம்மன் வரலாற்றை விரிவாக எழுதியுள்ளார்.
திருச்சியில் உள்ள ஓலைப்பிடாரி அம்மன், இதர அம்மன் கோயில் திருவிழாக்கள், கருப்பண்ண சுவாமி குறித்த வரலாற்றை அருமையாக விளக்கியுள்ளார்.
சோழர்களின் தலைநகராக உறையூர் இருந்துள்ளது; அதையொட்டிய சிறிய ஊரே இப்போதைய திருச்சி என்று கூறும் நூலாசிரியர், உறையூரில் உள்ள அம்மன் கோயில்தான் காவல் தெய்வமாக விளங்குகிறது என்கிறார்.
"16-ஆம் நூற்றாண்டில் நாயக்கர் ஆட்சியின் அரசி ராணி மங்கம்மாளின் ஆட்சிக் காலத்தில் விருப்பாச்சிபுரம் எல்லையில் உழவுத் தொழிலில் ஈடுபட்டிருந்தவர்கள் நிலத்தில் கடப்பாரையால் குத்திய போது, ரத்தம் பீறிட்டு வெளியே வந்த
அம்மன் குழுந்தலாயி அம்மனானதும், அது பின்னர் தெய்வக் குழந்தையாக உருப்பெற்றும் வளர்ந்துள்ளது.
அதை அச்சுறுத்திய ராவுத்தன் என்ற கொடியவனின் தொல்லையில் இருந்து தன்னைக் காப்பாற்ற கொல்லிமலையில் மாசி பெரியண்ணசாமிக்கு காவலாய் இருக்கும் கருப்பண்ணசாமியிடம் வேண்ட அவர் செவிசாய்த்து அண்ணனாக வந்து குழுந்தலாயி அம்மனைக் காத்துள்ளார். இதனால், குழுந்தலாயி அம்மன், தனக்கு சைவ பூஜையும், பின்னே கருப்பண்ணசாமிக்கு ஆட்டு ரத்தம் குடிக்கும் பூஜையும் நடத்தப்படும் என்று கூறினார்.
இதையொட்டியே ஆண்டுதோறும் விழாக்கள் நடைபெறுகின்றன என்கிறார் நூலாசிரியர்.
அம்மன் எல்லைகள், விழாக்கள், மருளாளி சுவாமி, தாரை, இரட்டைக்கிளி மாலை, வழிபாடுகள், கல்வெட்டு உள்ளிட்ட பல்வேறு தகவல்களையும் அவர் அளித்துள்ளார்.